• முகப்பு
  • இலங்கை
  • காலைமுரசு பத்திரிகை பொய்யான செய்தியை பிரசுரித்தது!!பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு.

காலைமுரசு பத்திரிகை பொய்யான செய்தியை பிரசுரித்தது!!பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு.

வவுனியா

UPDATED: Oct 2, 2024, 4:25:31 AM

தன்னைப்பற்றி போலியான செய்தியை பரப்பிய பத்திரிகை மீது சட்டநடவடிக்கையினை எடுக்க உள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் தெரிவித்தார்.இணையவழி பத்திரிகை ஒன்றில் முன்னாள் வன்னிபாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் மதுபாணநிலைய அனுமதிப்பத்திரங்களை பெற்று கைமாற்றியதாக ஒரு செய்தி வெளிவந்திருந்தது. 

 இது தொடர்பாக அவரது அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்…..

 இன்றைய காலைமுரசு என்ற இணையவழி பத்திரிகையில் எனது பெயரை பயன்படுத்தி இரண்டு மதுபாணநிலைய அனுமதிப்பத்திரத்தினை நான் பெற்றதாகவும் அதனை வேறொருவருக்கு மாற்றியதாகவும் ஒரு செய்தி வெளியிடப்பட்டுள்ளது. 

 இது உண்மையில் எனது பெயருக்கு களங்கம் ஏற்ப்படுத்தக்கூடிய வகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வவுனியா மாவட்ட சிரேஸ்டபொலிஸ் அத்தியட்சகரை சந்தித்து முறையிட்டுள்ளதுடன் வவுனியா பொலிஸ்நிலையத்திலும் முறையிட்டுள்ளேன். 

 உடனடியாக குறித்த பத்திரிகையின் ஆசிரியர் மற்றும் அந்த செய்தியாளர் இருவரையும் அழைத்து விசாரிப்பதாகவும் நீதிமன்றம் ஊடாக நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியுள்ளனர்.

 அத்துடன் சட்டத்தரணி ஊடாகவும் அவர்களுக்கு கடிதம் அனுப்பும் நடவடிக்கையினை முன்னெடுக்க உள்ளேன். பல அபிவிருத்தி வேலைகளை நாம் வன்னியில் செய்துவருகின்ற நிலையில் அவற்றை புறம்தள்ளிவிட்டு,இப்படியான வீணான பொய்யான செய்திகளை இந்த பத்திரிகை பரப்பியுள்ளது. 

 

 அந்த பத்திரிகையின் ஆசிரியர் ஒரு திறமை வாய்ந்தவர். அவர் இவ்வாறு உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிட்டிருப்பது வருந்தக்கது.இருப்பினும் இதற்கான சட்ட நடவடிக்கையினை நான் எடுத்தே தீருவேன்.மதுபாண அனுமதிப்பத்திரங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படுவதாக சொல்லப்படுகின்றது. ஆனால் ஆதாரபூர்வமாக நான் இதுவரை அறியவில்லை என்றார்.

 

VIDEOS

Recommended