அமைச்சர் ஜீவன் தொண்டமான் சீனா பயணமானார்

அமைச்சின் ஊடக பிரிவு

UPDATED: Jun 23, 2024, 4:42:49 PM

நீர் வழங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் 23.06.2024 ஞாயிற்றுக்கிழமை இன்று சீனாவிற்கான விஜயம் மேற்கொண்டுள்ளார்.

ஒரு வாரம் சீனாவில் தங்கியிருக்கும் அமைச்சர் முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார்.

இதில் உலக பொருளாதார மையத்தின் அழைப்பின்பேரில் உலக இளம் தலைவர்களுக்கான மாநாட்டில் கலந்துக்கொண்டு விசேட உரையாற்றவுள்ளார்.

மேலும் சீன அரசாங்கத்தின் மற்றும் சீன விஞ்ஞான ஆய்வகத்தின்(JRDC-Joint Research and Demonstration Center for Water Technology) அழைப்பையேற்று நீர் வளத்துறை, தோட்ட மற்றும் கிராமிய நீர்வளங்களை மேம்படுத்த அடுத்த 5 ஆண்டுக்கான திட்டங்களை வடிவமைத்தல் தொடர்பான நிகழ்வுகளிலும் பங்கேற்க உள்ளார்.

இந்த விஜயத்தின் போது நீர் வழங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான், அமைச்சின் அதிகாரிகள் உட்பட கலந்துக்கொள்ள உள்ளனர்.

 

VIDEOS

Recommended