மடவளை சிரேஷ்ட பிரஜைகள சங்கம் சர்வதேச முதியோர் தின கௌரவிப்பு
கண்டி நிருபர் ஜே.எம்.ஹாபீஸ்
UPDATED: Oct 3, 2024, 2:28:37 AM
மடவளை சிரேஷ்ட பிரஜைகள சங்கம் சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு எதிர் வரும் 5ம் திகதி கௌரவிப்பு நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.
மதீனா தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் முப் 9 மணிக்கு இடம் பெறும் இவ்வைபவத்தில் 75 வயதிற்கும் மேற்பட்ட பொதுச் சேவையில் ஈடுபட்ட சிரேஷ்ட பிரஜைகள் பலர் கௌரவிக்கப்பட உள்ளனர்.
அத்துடன் 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தமாணவர்களுக்கு மடவளை சிரேஷ்ட பிரஜைகள் அமைப்பின் புலமைப்பரிசில்களும் வழங்கப்படும்.
இது தவிர க.பொ.த. (சா/த) பரீட்சையில் 9 ஏ சித்திகள் பெற்றவர்களக்கும் க.பொ.த. (உ/த)பரீட்சையில் 3 ஏ சித்தி பெற்றவர்களுக்கும் புலமைப்பரிசிர்கள் வழங்கப்படும். இது தவிர இன்னும் பல அம்சங்களில் விசேட பரிசுகள்வழங்கப்பட உள்ளன.
தெரிவு செய்யப்பட்ட 25 முதியோர்களுக்கு உலர் உணவுப் பொதிகளும் வழங்கப்பட உள்ளன.
இவ்வைபவத்தில் இலங்கை நீர் வடிகால் மற்றும் நீர் வினியோக சபையின் மேலதி பொது முகாமையாளர் பிரதம பொறியிலாளர் எம்.டி.எம்.ராசில் கலந்து கொள்வதுடன், நாவலப்பிட்டிய மாவட்ட வைத்திய சாலை வைத்திய அதிகாரி டாக்டர் நஜ்மி அனீஸ் விசேட அதிதியாகக் கலந்து கொள்வார். மடவளை ஜாமியுல் கைராத் ஜும்மா பள்ளி நிர்வாக சபைத் தலைவர் டப்ளியு. எம். நாஜிம் அவர்களும் கௌரவ அதிதியாகக்bகலந்து கொள்வார்.
மற்றும் ஒரு கௌரவ அதிதியாகக் கலந்து கொள்ளும் கம்பளை உடபலாத்த காதி நீதவான் அஷ்ஷேக் எம்.ஏ. அனஸ் மொகமட் (நளீமி) விசேட சொற்பொழிவாற்றுவார்.
ஓய்வு பெற்ற பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.ஏ.ஜெலீல் மற்றும் ஓய்வு பெற்ற முஸ்லிம் விவாகப் பதிவாளர் ஏ.எஸ்.எம் கியாஸ் உற்பட இன்னும் பலர் கௌரவிக்கப்பட உள்ளனர்.