அமைச்சரவையில் முஸ்லிம் சமூகப் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதிக்கு கடிதம்
அஷ்ரப் ஏ சமத்
UPDATED: Nov 18, 2024, 3:18:28 PM
கௌரவ ஜனாதிபதி அவர்களுக்கு,
புதிதாக நியமிக்கப்பட்ட உங்களது அமைச்சரவைக்கு எமது வாழ்த்துகள்.
2024.11.14 ஆம் திகதி நடைபெற்ற 10 ஆவது பாராளுமன்றத்துக்கான தேர்தலில் நீங்கள் தலைமை வகிக்கும் அணி அனைத்து மக்களினதும் ஆதரவுடன் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து உங்களால் நியமிக்கப்பட்ட புதிய அமைச்சரவையின் எதிர்காலச் செயற்பாடுகள் சகல வழிகளிலும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு இந்த நாட்டின் எதிர்கால முன்னேற்றத்துக்காகப் பணியாற்றத் கூடிய அமைச்சரவையாக மாற வேண்டும் என நாங்கள் மனதாரப் பிரார்த்திக்கிறோம்.
மேலும் இந்த அமைச்சரவையில் எமது முஸ்லிம் சமூகத்தின் கருத்துக்களை பிரதிபலிப்பதற்கான எமது பிரதிநிதியொருவர் இல்லாதிருப்பதனால் எமது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் உங்களது அமைச்சரவைக்கு முன்வைப்பதற்கு உள்ள வாய்ப்பு இல்லாமல் போகிறது என்பதனை கவலையுடன் உங்களிடம் முன்வைக்கிறோம்.
கௌரவ ஜனாதிபதி அவர்கள் இந்த விடயத்தில் கரிசனை காட்டி துரிதமாக முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்காக எமது சமூகத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நன்றி.
தேசியத் தலைவர். ஷாம் நவாஸ், அகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிப முன்னணி