• முகப்பு
  • இலங்கை
  • இன்னல்கள் நீங்கி விமோசனம் அடைய இறைவனைப் பிரார்த்திப்போம் - ரவூப் ஹக்கீம் mp

இன்னல்கள் நீங்கி விமோசனம் அடைய இறைவனைப் பிரார்த்திப்போம் - ரவூப் ஹக்கீம் mp

இர்ஷாத் ரஹ்மதுல்லா

UPDATED: Jun 17, 2024, 12:33:37 PM

இலங்கையிலும், குறிப்பாக பலஸ்தீனம் உட்பட ஏனைய சில உலக நாடுகளிலும் முஸ்லிம்கள் அனுபவித்து வரும் இன்னல்களிலிருந்து விமோசனம் பெறுவதற்கு "ஈதுல் அழ்ஹா " பெருநாள் தினத்தில் இறைவனை இறைஞ்சுவோமாக என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் பெருநாள் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவரது "ஈதுல் அழ்ஹா"பெருநாள் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

 ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் அரேபியப் பாலைவனத்தில், மக்காவிலும் அதனை சூழ உள்ள பிரதேசங்களிலும் நபி இப்ராஹீம் (அலை), நபி இஸ்மாயில் (அலை), அன்னை ஹாஜரா ஆகியோர்a மேற்கொண்ட அளப்பரிய அர்ப்பணிப்பை மையப்படுத்தியதாக உலகெங்கும் உள்ள முஸ்லிம்கள் "ஈதுல் அழ்ஹா" பெருநாளைக் கொண்டாடுகின்றனர்.

 ஆண்டுதோறும் உலகளாவிய முஸ்லிம்கள் பல்வேறு சோதனைகளுக்கும், வேதனைகளுக்கும் முகம் கொடுத்தவாறு பெருநாட்களைச் சந்தித்து வருகின்றனர்.

இவ்வாறான சூழ்நிலையில் உலகில் அமைதி நிலவவும், நாம் அனைவரும் ஈருலகிலும் ஈடேற்றம் பெறவும் எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக என்றும்  தெரிவித்துள்ளார்.

 

VIDEOS

Recommended