மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் வீட்டுப் பிரச்சினைக்கான நிறந்தர தீர்வு காணி உறிமையே
இர்ஷாத் றஹ்மத்துல்லா
UPDATED: Oct 21, 2024, 4:22:34 AM
மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் வீட்டுப் பிரச்சினைக்கான நிறந்தர தீர்வு காணி உறிமையினை பெற்றுக் கொடுப்பதே! என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
ALSO READ | மாவனல்லை பதுரியாவில் சின்னம் சூட்டும் நிகழ்வு
பொகவந்தலாவ பகுதியில் இடம் பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதன் போது மக்கள் மத்தியில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
பெருந்தோட்ட மக்களுக்கான வீட்டுப் பிரச்சினை என்பது பொதுவான ஒன்றாகும். இதற்கான நிறந்தர தீர்வானது காணி உரித்தினை பெற்றுக்கொடுப்பதே ஆகும். எனவேதான் நான் அமைச்சுப் பதவியினை பொறுப்பேற்ற நாள் தொடக்கம் எமது மக்களுக்கான காணி உறுதியினை பெற்றுக்கொடுப்பதே நிறந்தர நோக்கமாக காணப்பட்டது.
பாராளுமன்றத்தில் 88 தடவை நான் பேசியிருக்கிறேன். அதில் 18 தடவைகள் மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து பேசியுள்ளேன். மிகுதியான 70 தடவைகள் மறைக்கப்பட்ட சமூகம் தொடர்பாக பேசியுள்ளேன்.
மலையகத்தை பொருத்த வரையில் வீட்டுத்திட்டத்தை விட காணிகளுக்கு மாத்திரமே நாம் முதலிடம் வழங்கப்பட வேண்டும். ஏனெனில் ஒரு தோட்டபகுதியில் நூறு குடும்பங்கள் இருந்தால் அந்த நூறு குடும்பங்களுக்கும் வீடுகள் கிடைக்காது. அரசாங்கம் மக்களை பொறுப்பேற்க வேண்டும் அவ்வாறு செய்தால் மாத்திரமே மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை காணமுடியும் என தெரிவித்தார்.