• முகப்பு
  • இலங்கை
  • மன்னார் மாவட்ட மக்களுக்கான காணி உறுதி பத்திரங்கள் ஜனாதிபதியினால் வழங்கிவைப்பு

மன்னார் மாவட்ட மக்களுக்கான காணி உறுதி பத்திரங்கள் ஜனாதிபதியினால் வழங்கிவைப்பு

இர்ஷாத் ரஹ்மதுல்லா

UPDATED: Jun 17, 2024, 1:43:51 AM

மக்களின் காணி பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் நோக்குடன் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்படும் உரித்து தேசிய வேலை திட்டத்தின் கீழ், மன்னார் மாவட்ட பயனாளர்களுக்கான காணி உறுதி பத்திரங்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வழங்கி வைக்கப்பட்டது. 

மன்னார் நகர சபை கேட்போர் கூடத்தில் இதற்கான நிகழ்வு நேற்று (16/06/2024) நடைபெற்றது. 

இதன்போது 442  பேருக்கான காணி உறுதிப்பத்திரங்கள்  ஜனாதிபதி அவர்களினால் வழங்கப்பட்டன.

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ். எம். சார்ள்ஸ் அவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும்,  மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் நிகழ்வில் கலந்து கொண்டனர். 

பயிர் செய்கை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான காப்புறுதி நிதிக்கான காசோலைகளும், உர மானியத்துக்கான காசோலைகளும்  இதன்போது வழங்கப்பட்டன.

 

VIDEOS

Recommended