கல்வி, சுகாதாரம், சமூக நலன் தொடர்பிலான பிரச்சினைகளை தீர்ப்பதாக மக்களிடம் குகதாசன் எம். பி.தெரிவிப்பு
ஏ. எம். கீத்
UPDATED: Aug 18, 2024, 7:38:09 AM
திருகோணமலை வெருகல் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட இலங்கை முகத்துவாரம் கண்ணகி அம்மன் கோயிலில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் அவர்களை மக்கள் (17) அமோக வரவேற்பளித்தனர்.
குறித்த பகுதியில் நிலவும் குறைபாடுகள் தொடர்பிலும் இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர் மக்களிடம் கேட்டறிந்து கொண்டார். கல்வி, சுகாதாரம், சமூக நலன் தொடர்பிலும் பிரச்சினைகளை தீர்ப்பதாகவும் மக்களிடம் இதன் போது தெரிவித்தார்.
இங்கு காணப்படும் பாடசாலைகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது அதனை கருத்தில் கொண்டு தொண்டர் ஆசிரியர் நியமனங்களை வழங்கி மாதாந்த கொடுப்பனவுகளை வழங்கி வருகிறோம்.
ALSO READ | 2026-இல் அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி - காமராஜ்
பிரதேச வைத்தியசாலையின் நலன் கருதி இரு வைத்தியர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுப்பேன் என பாராளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார்.
இதில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு