ஜீவன் தொண்டமான் தொழிலாளர்களுக்காக அடாவடியாக களத்தில் இறங்கியதால் வெற்றி கிடைத்தது
ஆ.ரமேஸ்
UPDATED: May 30, 2024, 5:07:22 PM
அன்புக்கும்,அதிகாரத்திற்கும் அடிபணியாத களனிவெளி பெருந்தோட்ட நிர்வாகம்,ஜீவன் தொண்டமான் தொழிலாளர்களுக்காக அடாவடியாக களத்தில் இறங்கியதால் வெற்றி கிடைத்தது.
உடரதல்ல தோட்டத்தில் 280 தொழிலாளர்கள் கட்சி பேதமின்றி களனிவெளி பெருந்தோட்ட நிர்வாகத்தின் தான்தோன்றி தனமான போக்குக்கு எதிராக கடந்த ஒரு மாத காலமாக பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தினை நடத்தி வந்தனர்.
உடரதல்ல தோட்டத்தில் தேயிலையை அழித்துவிட்டு அங்கு கோப்பியை பயிரிட களனிவெளி பெருந்தோட்ட நிர்வாகம் கையாண்ட தான்தோன்றி தனத்தை எதிர்த்தே இந்த பகிஷ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிலையில் இது தொடர்பான பேச்சுவார்த்தை நுவரெலியா உதவி தொழில் ஆணையாளர் அலுவலகத்தில் (30) வியாழகிழமை இடம்பெற்றது.
ALSO READ | 1 லட்சம் லஞ்சம் பெற்ற ஆண்டிபட்டி தாசில்தார்.
இதன்போது உடரதல்ல தோட்டத்தில் கோப்பி பயிரிடுவதற்கு தேயிலை மரங்களை பிடுங்க தோட்ட நிர்வாகம் கொண்டுவந்த இயந்திரத்தை தடுத்த தோட்ட தலைவர்கள் மூவரை பணியிடை நிறுத்தியிருந்தனர்.
முதலில் பணியிடை நிறுத்தப்பட்ட மூவருக்கு தொழில் வழங்க வேண்டும் என இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் தோட்ட நிர்வாகம் இணக்கப்பாட்டுக்கு வரவில்லை. இதனால் பேச்சுவார்த்தை இனக்கபாடின்றி முடிவடைந்தது.
அதேநேரத்தில் உடரதல்ல தோட்ட மக்களுக்கு தீர்வு கிட்டும் வரை களனிவெளி பெருந்தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக அதிரடியாக தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுப்படுவதாக இ.தொ.கா களம் இறங்கியது.
அதேநேரம் களனிவெளி நிர்வாகத்துக்குரிய தோட்ட தொழிற்சாலைகளில் இருந்து தேயிலை தூளை விற்பணைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைக்கு இ.தொ.கா தடை விதித்தது.
இந்த நிலையில் கொந்தளித்த தோட்ட தொழிலாளர்கள் நானு ஓயா,நுவரெலியா பீட்று ஆகிய தோட்டங்கள் உள்ளிட்ட பல தோட்டங்களில் தொழிற்சாலைகளின் பிரதான வாயிலை மூடி (30) மாலை போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதன்போது நுவரெலியா பீட்று தோட்டத்தில் களம் இறங்கிய அமைச்சர் ஜீவன் தொண்டமான் தமது ஆதரவாளர்களுடன் கட்சி பேதமின்றி ஆர்பாட்டத்தில் குதித்தார்.
இதை தாங்க முடியாத களனிவெளி தோட்ட நிர்வாக உயர் அதிகாரிகள் சுமுகமான பேச்சுவார்த்தைக்கு அடங்கி வந்ததுடன் உடரதல்ல தோட்டத்தில் பணியிடை நீக்கப்பட்ட மூன்று தொழிலாளர்களுக்கு தொழில் வழங்க சுமுகமாக ஒப்பு கொண்டனர்.
மேலும் வேறொறு தினத்தில் ஏனைய பிரச்சினைகளை பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு காண ஒத்து வந்தனர் இதனால் ஒரேநாளில் தொழிலாளர்களின் பிரச்சினைக்கு வெற்றி கிடைத்தது.
இதையடுத்து அதிரடி தொழிற்சங்க நடவடிக்கையை தற்காலிகமாக கைவிட்டதாகவும், கட்சி பேதமின்றி தொழிலாளர்கள் பிரச்சினைக்கு அனைவரும் ஒன்றுபட்டால் தீர்வை பெறமுடியும் என்பது உறுதி என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.