• முகப்பு
  • இலங்கை
  • இலங்கை மற்றும் மாலைத்தீவு நாடுகளுக்கான ஐக்கிய அமெரிக்கா சர்வதேச அபிவிருத்தியின் தூதரக பணிப்பாளர் கெப்ரியல் கிராவுக்கும் ஜீவன் தொண்டமான் வாழ்த்து

இலங்கை மற்றும் மாலைத்தீவு நாடுகளுக்கான ஐக்கிய அமெரிக்கா சர்வதேச அபிவிருத்தியின் தூதரக பணிப்பாளர் கெப்ரியல் கிராவுக்கும் ஜீவன் தொண்டமான் வாழ்த்து

ஆ.ரமேஸ்

UPDATED: Jun 11, 2024, 8:51:25 AM

இலங்கையில் பெருந்தோட்ட சமூகம் நாட்டில் ஏனைய சமூகங்களை போல கல்வி,தொழில், மற்றும் பொருளாதாரம் வலுப்படுத்தல் உள்ளிட்ட நலத்திட்டங்களில் தமது வாழ்க்கை தரத்தினை உயர்த்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

original/img-20240611-wa0083
நீர் வழங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சில் இந்த கலந்துரையாடல் நேற்று திங்கட்கிழமை (10.06.2024) இடம்பெற்றது.

இலங்கை மற்றும் மாலைத்தீவு நாடுகளுக்கான ஐக்கிய அமெரிக்கா சர்வதேச அபிவிருத்தியின் தூதரக பணிப்பாளர் கெப்ரியல் கிராவுக்கும், நீர் வழங்கள் மற்றுப் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகிய இருவருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பில் இவ்விடயம் கலந்துரையாடப்பட்டதாக அமைச்சின் ஊடக பிரிவு தெரிவித்தது.

இதன்போது இலங்கையில் வாழ்கின்ற பெருந்தோட்டத் துறையினர் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட்டுளளதுடன்,

மலையகத்தில் பயிரிடப்பட்டுள்ள பல்வேறு வகையான தேயிலை வகைகளை பொருளாதார அபிவிருத்திக்கு எவ்வாறு பயன்படுத்திகொள்ள முடியும் என்பது தொடர்பிலும், மலையக பிரதேசங்களில் பிரதான வீதியோரங்களில் சுயத்தொழிலில் ஈடுப்பட்டு வரும் சிறு வியாபாரிகள் ஊடாக தேயிலை தூள் வியாபாரத்தை எவ்வாறு முன்னெடுப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டு உடன்பாடு திட்டமொன்றை உருவாக்க இருவரும் ஒப்புக்கொண்டனர்..

அத்துடன் மலையக பெருந்தோட்ட சமூகத்தினர் நாட்டில் ஏனைய சமூகத்தினர் போல கல்வி,தொழில்,

பொருளாதாரம் உள்ளிட்ட நல மேம்பாட்டு திட்டங்களில் வாழ வலுப்படுத்தல் தொடர்பில் அதிக கவனம் செலுத்தி கலந்துரையாடப்பட்டதுடன், நாட்டின் ஏனைய சமுகங்களுடன் மலையக சமூகத்தை உள்ளடக்கி ஐக்கிய அமெரிக்கா சர்வதேச அபிவிருத்தியின் ஒத்துழைப்பை எவ்வாறு விரிவுபடுத்தலாம் என்பதிலும் கலந்துரையாடி இருவருக்கும் இடையில் உடன்பாடு ஒன்றும் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சின் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

அதேநேரத்தில் மலையக பெருந்தோட்ட சமூகத்தின் பொருளாதார வாய்ப்புக்களை உருவாக்குவதற்கும்,இம் மக்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கும்,

ஏனைய சமூகத்திலிருந்து எமது சமூகத்தை ஓரங்கட்டப்படுவதை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், சமூகத்தை மேம்படுத்துவதற்கும் அந்தப் பணியைச் செய்வதில் நான் உறுதியாக இருக்கின்றேன் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் இதன்போது தெரிவித்ததாகவும் அமைச்சின் ஊடக பிரிவு செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

 

VIDEOS

Recommended