• முகப்பு
  • இலங்கை
  • எந்த பாகுபாடும் இல்லாமல் மனிதாபிமானத்தின் பெயரால் காஸா மக்களுக்காக நாம் முன்நிற்க வேண்டும் - சஜித்

எந்த பாகுபாடும் இல்லாமல் மனிதாபிமானத்தின் பெயரால் காஸா மக்களுக்காக நாம் முன்நிற்க வேண்டும் - சஜித்

இர்ஷாத் ரஹ்மதுல்லா

UPDATED: May 21, 2024, 5:25:55 AM

காஸா பகுதியில் நடந்து வரும் அழிவு குறித்து பாராளுமன்றத்திற்கு வெளியேயும் உள்ளேயும் நான் குரல் கொடுத்தேன். இந்த இரு நாடுகளும் சகோதரத்துவத்துடனும் நல்லிணக்கத்துடனும் வாழ வேண்டும் என்று நம்புகிறேன். இஸ்ரேலில் பெஞ்சமின் நெதன்யாகு பிரதமரின் அரசாங்கம், தமது அரசாங்கத்தின் கடும்போக்காளர்களுடன் இணைந்து பாலஸ்தீனம் முழுவதையும் தரைமட்டமாக்கும் அரச பயங்கரவாதக் கொள்கையை செயல்படுத்தி வருகிறது. இந்த மிலேச்சத்தனத்தை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 194 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் களுத்துறை, பாணந்துறை அலவியா முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு மே 20 ஆம் திகதி இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.original/img-20240521-wa0035

இஸ்ரேல் பிரதமரின் பெயரை குறிப்பிட நான் அஞ்சவில்லை. ஏனென்றால் அவருடைய தலைமையில் அரச பயங்கரவாதம் அரங்கேற்றப்பட்டு வருகிறது. முழு பாலஸ்தீன பூமியையும் தரைமட்டமாக்கும் கொள்கைக்கு என்னால் உடன்பட முடியாது. நான் சொல்ல வேண்டியதை நேரடியாக முகத்திலயே சொல்விடுவேன். எம்மைப் போன்ற நாடுகள், சமூகங்கள் இது குறித்து வெளிப்படையாக பேசும் போது, நான் நினைக்கிறேன்.

நெதன்யாகு அரசாங்கத்திற்கு புரியவரும் இந்த படுகொலையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று. ஒரு நாட்டை உருவாக்குவதற்கான சர்வதேச நிபந்தனைகள் இருக்கின்றன. அதில் ஒன்றுதான் எல்லையாகும். அரசாங்கமொன்று அமைய வேண்டும் அதாவது ஆட்சி நிர்வாகம் ஒன்று இருக்க வேண்டும். மற்றுமொன்று தான் அங்கு மக்கள் இருக்க வேண்டும்.

original/img-20240521-wa0046எனக்கு தெரிந்த வரையில் நாடொன்றை, தேசமொன்றை உருவாக்குவதற்கான நிபந்தனைகளில் ஒன்றை முழுமையாக இல்லாமலாக்கப் போகின்றனர். நிலத்தை மிகுதப்படுத்தி பலஸ்தீன மக்களை நேரடியாக இல்லாதொழிக்க, துரத்த, மரணிக்கச் செய்கின்றனர். பலஸ்தீன நாட்டை உருவாக்க முடியாது, இங்கு மக்கள் இல்லையே என்ற அப்போது கூற முடியும்.

original/img-20240521-wa0047
இதற்காக நாம் மேற்கொள்ள முடியுமான சாத்தியமான விளைவுகளை ஏற்படுத்தும் அழுத்தங்களை தலையீடுகளை மேற்கொள்ள வேண்டும். இதற்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும். 

எனவே, பலஸ்தீன மக்களை அழிக்கும் இந்த அரச பயங்கரவாதத்தை, அரச மிலேச்சத்தனத்தை இஸ்ரேலின் பெஞ்சமின் நெதன்யாகுவின் இந்த படுமோசமான நடவடிக்கையை தோற்கடிக்க, முஸ்லிம் உலகு மாத்திரமல்ல மனிதநேயம் தெரிந்த, இன,மத, குலம், கோத்திரம், கட்சி அல்லது பிற வேறுபாடுகள் இருந்தால் அவற்றையெல்லாம் களைந்து நாமனைவரும் மனிதாபிமானம் என்ற பெயரில் ஒன்றாக இணைய வேண்டும் நான் இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.

இதன்போது, பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினருக்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது.



 

VIDEOS

Recommended