கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நாம் கண்டி மாவட்டத்தில் சிறிய வாக்கு வித்தியாசத்தில் தான் தோல்வியடைந்தோம் - சமிந்தானி கிரியெல்ல
ஜே.எம்.ஹாபீஸ்
UPDATED: Oct 22, 2024, 8:53:04 AM
கண்டி மாவட்டத்தில் பெண்களது வாக்குகள் அதிகளவில் தனக்கு கிடைக்க உள்ளதாகவும் இதனால் தான் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்றும் கண்டி மாவட்ட ஐக்கிய மக்கள சக்தியின் பெண் வேட்பாளர் சமிந்தானி கிரியெல்ல தெரிவித்தார்.
மல்வத்தை பீடத்தின் மகாநாயக்கத் தேரர் வண. திப்பட்டுவாவே ஶ்ரீ சுமங்கள சித்தார்த்த தேரர் மற்றும் அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரர் வண. வேன்டறுவே உபாலி தேரர் ஆகியோரைச் சந்தித்து நல்லாசிகள் பெற்றபின் அவர் ஊடகங்களுக்கு இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கயைில்-
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நாம் கண்டி மாவட்டத்தில் சிறிய வாக்கு வித்தியாசத்தில் தான் தோல்வியடைந்தோம். ஆனால் இம்முறை சிறிய கட்சிகளுக்கு வாக்குகள் பல சிதரிப் போவதால் எமது விகிதாசாரம் அதிகரிக்கும் இதன் காரணமாக நாம் கண்டி மாவட்டத்தில் அதிகளவு ஆசனங்களைக் கைப்பற்றி நாமே வெற்றி பெறிவோம்.
எமக்கு கண்டி மாவட்டத்தில் எந்த ஒரு அரசியல் கட்சியும் சவாலாக இல்லை. மேலும் கண்டியில் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் குழுவிற்கு மகிந்தானந்த அழுத்கமகே தலைமை தாங்கு கிறார். ஜனாதிபதித் தேர்தலில் சிலிண்டருக்கு வாக்களித்த பலர் இம்முறை எமக்கே வாக்களிப்பர்.
அவர்கள் எமது பழைய ஐ.தே.க. ஆதரவாளர்கள், எனவே எமக்கு அதரவு அதிகரித்துள்ளது. நாமே வெற்றி பெறுவோம் என்றார்.