கௌரவிப்பு நிகழ்வும் கற்பித்தல் அனுகுமுறை தொடர்பான கருத்தரங்கும்
ஏ.எஸ்.எம்.ஜாவித்
UPDATED: Jul 14, 2024, 7:57:23 AM
அண்மையில் மேல் மாகாண அரச பாடசாலைகளுக்கு நியமனம்பெற்ற 138 புதிய பட்டதாரி ஆசிரியர்களை வரவேற்று கௌரவிக்கும் நிகழ்வு மேல் மாகாண புத்திஜீவிகள் அமைப்பின் ஏற்பாட்டில் நேற்று (13) சனிக்கிழமை கொழும்பு ஸ்ரீ சங்கராஜ மாவத்தையில் அமைந்துள்ள "அல் -ஹிதாயா கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ALSO READ | இன்றைய ராசி பலன்கள் 14-07-2024
அமைப்பின் தலைர் ஏ.எஸ்.முஹம்மத் தலைமையில் எம்.சி. பஹர்டீன் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இவ்வைபத்தில் பிரதம அதிதியாக முன்னை நாள் கொழும்பு மாநகர மேயரும் முன்னை நாள் ஐக்கிய அரபு எமிரேட்சின் இலங்கைக்கான தூதுவருமான அல் ஹாஜ் ஹுஸைன் முஹம்மத் கலந்து சிறப்பித்தார்.
விரிவுரைகளை வளவாளர்களான மன்றத்தின் சிரேஷ்ட உபதலைவர் கலாநிதி ரவுப் ஸெயின், 21ம் நூற்றாண்டு ஆசிரியரின் வகிபாகம் எனும் தலைப்பிலும், ஒரு ஆசிரியரின் அனுபவ பகிர்வு எனும் தலைப்பில் முன்னால் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் எம்.எம். மொகமட் அவர்களாலும் ஆசிரியர்கள் பற்றி ஒரு தொழில் அதிபரின் பார்வை எனும் தலைப்பில் சீனத் ட்ரேடிங் நிறுவன அதிபர் எம்.எச்.எம் மாகிர் அவர்களாலும், தனியாள் ஆற்றல்களை இனம் காணலும் குழுக் கட்டமைப்பை கட்டியெழுப்புவதும் எனும் தலைப்பில் மன்றத்தின் நிறைவேற்று உறுப்பினர் பேராசிரியர் டொக்டர் எம்.எஸ் மொகமட் சிபா அவர்களாலும் தனிப்பட்ட திறன்கள் உறவுகள் எனும் தலைப்பில் மன்றத்தின் நிறைவேற்று உறுப்பினர் டொக்டர் றிசாட் புஹாரி அவர்களாலும் சிறப்பாக வழங்கப்பட்டது.
இதன்போது கருத்தரங்கில் பங்குபற்றியவர்களுக்கு சான்றிதழ்களும் பணப்பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் அதிகளும் சங்கத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டுக் கொண்டிருக்கும் முக்கியஸ்தர்களும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
அமைப்பின் சகல அங்கத்தவர்களும் கலந்து சிறப்பித்தனர்.