இன்றைய தினம் நடாத்திய போராட்டத்தை தான் கொச்சைப்படுத்த விரும்பவில்லை
ராமு தனராஜா
UPDATED: Apr 21, 2024, 5:30:00 PM
1700 ரூபாய் சம்பளம் கோரி இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் இன்றைய தினம் நடாத்திய போராட்டத்தை தான் கொச்சைப்படுத்த விரும்பவில்லை என்றும் இது ஒரு நல்ல விடயம் என்றே சொல்ல வேண்டும் கெட்ட விடயம் என்று சொல்ல முடியாது.
இருப்பினும் தான் இப்போராட்டத்திற்கு ஆதரவு வழங்க முடியும் என்று சொல்ல முடியாது.ஏனென்றால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்னுடனோ என்னுடைய தொழிற்சங்கங்களுடனோ கலந்துரையாடவில்லை. என ஐக்கிய தொழிலாளர் முன்னணியின் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்தார்.
ஊடகவியலாளர் தொலைபேசியின் ஊடாக எழுப்பிய கேள்விகளுக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
அவர் மேலும் பதிலளிக்கையில் இன்றைய தினம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் இவ்வாறான போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதாக தனக்கு அரசல் புரசலாக காதில் விழுந்ததாகவும் தன்னுடன் கலந்து ஆலோசித்து இருந்தால் முழுமையான ஆதரவை தான் வழங்கியிருப்பதாகவும் என அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் Thegreatindianewd இணையத்திற்கு வழங்கிய செவ்வியும் இதனுடன் வாசகர்களுக்கு இணைக்கப்பட்டுள்ளது.