சர்வதேச மனித உரிமை அமைப்பு பேரவை மற்றும் சர்வதேச பெளத்த சம்மேளனத்தின் ஆதரவுடன் வாழ்த்து
எம்.நசார் - கொழும்பு
UPDATED: Sep 19, 2024, 8:01:32 AM
கண்ணகி கலாலயம், ஐக்கிய சுயதொழில் வியாபாரிகள் சங்க கலை அரண், மற்றும் தேசிய கலை அரண் ஆகியவற்றின் ஏற்பாட்டில், சர்வதேச மனித உரிமை அமைப்பு பேரவை மற்றும் சர்வதேச பெளத்த சம்மேளனத்தின் ஆதரவுடன் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) சிறப்பாக ஒரு நிகழ்வு நடைபெற்றது.
இதில் பல துறை கலைஞர்கள், கலை, ஊடகம் மற்றும் சமூக சேவை போன்ற பல்வேறு பிரிவுகளில், "வாழும் போதே வாழ்த்துவோம்" என்ற தலைப்பின் கீழ் கௌரவிக்கப்பட்டனர்.
ALSO READ | ஓமந்தையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் மரணம்
இந்த நிகழ்வில், 500 கலைஞர்கள் தங்கள் துறைகளில் அடைந்த சாதனைகளுக்காக, இரண்டு கட்டங்களாக காலை முதல் மாலை வரை நடைபெற்று, பிரமாண்டமான கௌரவிப்பு விழாவில் பாராட்டப்பட்டனர்.
சர்வதேச மனித உரிமைகள் பேரவையின் முகாமைத்துவ பணிப்பாளர் பிரதீப் சார்ல்ஸ், இந்நிகழ்வை சிறப்பாக நடத்துவதில் முழு பங்களிப்பையும் வழங்கி, நிகழ்வின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
முக்கிய அதிதியாக கலந்து கொண்ட ஜனாதிபதி தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னபிரிய, தமிழ் கலைஞர்களுக்கு மட்டுமின்றி மற்ற கலைஞர்களுக்கும் தொடர்ந்து ஆதரவு வழங்குவதாகக் குறிப்பிட்டார்.
ALSO READ | தினம் ஒரு திருக்குறள் 17-09‐2024
கண்ணகி கலாலயம் மற்றும் தேசிய கலை அரண் குறுகிய காலத்தில் இந்த விழாவை திட்டமிட்டு மிகச் சிறப்பாக நடத்தியது.
விருதுகள் விலை போவதைத் தடுக்கவும், தகுந்த நேரத்தில் கலைஞர்களுக்கு கௌரவம் வழங்குவதும் முக்கியமாக இருந்தது. "வாழும் போதே வாழ்த்துவோம்" என்ற கருத்தின் அடிப்படையில், எதிர்காலத்திலும் இதுபோன்ற நிகழ்வுகள் நடத்தப்பட்டு, கலைஞர்கள் குறித்து சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதே இந்த விழாவின் நோக்கம்.
தேசிய கலைஞர்களை கெளரவிக்கின்ற நிகழ்வில் கலையரசி லங்க புத்ர, தேசபந்து
மக்கள் முரசு" , லங்க புத்ர, தேசபந்து
கலாபூசனம் லங்க புத்ர, தேசபந்து போன்ற கெளரவங்கள் ஊடக துறை குடும்பமான கிங்ஸ்லி அவர்களின் குடும்பத்தினருக்கு கிடைத்தமை வரவேற்க்கதக்கது.