செயின் மாஸ்டருக்கு மாபெரும் கெளரவிப்பு விழா.
எஸ்.எம்.எம்.முர்ஷித்.
UPDATED: Oct 11, 2024, 5:56:18 PM
ஓட்டமாவடி கோட்ட கல்வி அலுவலகப் பிரிவிலுள்ள ஜெயந்தியாய அஹமட் ஹிராஸ் வித்தியாலயத்தில் அதிபராகக்கடமையாற்றி ஓய்வு பெற்றுச் சென்ற எம்.ஐ.செயினுலாப்தீனின் சேவையை பாராட்டி, வாழ்த்தி, கௌரவிக்கும் நிகழ்வு வித்தியாலய அதிபர் எஸ்.ஐ.முஹாஜிரீன் தலைமையில் வித்தியாலய முன்றலில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
விழாவிற்கு பிரதம அதிதியாக விழாவின் கதாநாயகன் எம்.ஐ.செயினுலாப்தீன் கலந்து கொண்டார்.
கௌரவ அதிதிகளாக ஓட்டமாவடி கோட்டக்கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.தாஹிர், மட்டக்களப்பு மத்தி ஆசிரிய ஆலோசகர் எம்.பி.எம்.நபீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விஷேட அதிதிகளாக வாகரைப்பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் எம்.எச்.முஹம்மட், பாடசலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களான ஜே.எம்.முனாபிர், ஐ.எல்.எம்.லத்தீப், திருமதி பஸ்மிலா இப்றாஹீம், திருமதி என்.எம்.ஹனபியா, கிராம சேவை உத்தியோகத்தர் எச்.எம்.அஸ்கர், மகாவலி அபிவிருத்திப் பிரிவு முகாமையாளர் டபள்யூ.ஜி.எம்.சமன்குமார, ஓய்வுபெற்ற பிரதிக் கல்விப்பணிப்பாளர் எம்.ரீ.எம்.அஸ்ரப், ஓய்வுபெற்ற அதிபர் எச்.எம்.எம்.இஸ்மாயில், ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர் எம்.எம்.நிலாப்தீன், அதிபர் எம்.ஐ.எம்.றபீக், ஓய்வுபெற்ற ஆசிரியர் எம்.எஸ்.எம்.பரீட், உளவியல் ஆலோசகர் மௌலவி எல்.ரீ.ஏ.ஹலீம் ஆகியோரும்
சிறப்பதிதிகளாக ஸல்ஸபீல் விழையாட்டுக்கழகத் தலைவர் எம்.எம்.கரீம், தக்வா ஜும்ஆ பள்ளிவாயல் உப தலைவர் எச்.ஏ.பாரீஸ், விவசாய சங்கத்தலைவர் ஏ.அஹமட், தக்வா ஜும்ஆ பள்ளிவாயல் உப செயலாளர் ஸட்.ஏ.றஸ்மி, கிராம அபிவிருத்திச்சங்கத் தலைவர் எஸ்.சித்தீக், லெஜன்ட்ஸ் விளையாட்டுக்கழகத்தலைவர் எஸ்.எம்.அன்சார், மாதர் அபிவிருத்திச்சங்கத்தலைவி எம்.எம்.மீரா உம்மா ஆகியோரும்
எமது அதிதிகளாக ஓய்வுபெற்ற உதவிக் கல்விப்பணிப்பாளர் எம்.ஐ.ஈஸா லெப்பை, ஊடகவியலாளர் எஸ்.எம்.எம்.முர்ஷித், ஓய்வுபெற்ற தபாலதிபர் எம்.ஐ.இல்யாஸ், ஓய்வுபெற்ற பலநோக்கு கூட்டுறவுச்சங்க பொது முகாமையாளர் எம்.ஏ.ஸலாம், தொழிலதிபர் எச்.எம்.இம்ரான் பாய், கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எம்.ஏ.ஹாதி, தொழிலதிபர் ஸட்.ஏ.ரௌஸ்தீன், ஆசிரியர்களான எம்.ஜ.ஹைதர் அலி, ஈ.எல்.றுஸ்லி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
விழாவின் கதாநாயகன் பற்றி அவரது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், பிரதேச மக்கள் பாடசாலைச் சமூகத்தினரால் வாழ்த்துப்பா கவிதைகள், பேச்சுக்கள், பாட்டு எனப்பல்வேறுபட்ட கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன.
ஓய்வுபெற்ற அதிபருக்கு பாடசாலை அதிபர் எஸ்.ஐ.முஹாஜிரீன், ஆசிரியர்கள், மாணவர்கள், சமூக அமைப்புக்கள் அதிபர் அவர்களின் உறவினர்கள் ஆகியோர் நினைவுப் பரிசில்களை வழங்கியதோடு, பொன்னாடை போர்த்திக் கௌரவித்தனர்.