• முகப்பு
  • இலங்கை
  • நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை திருத்தம்

நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை திருத்தம்

இர்ஷாத் ரஹ்மத்துல்லா

UPDATED: Nov 30, 2024, 3:01:49 PM

இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை திருத்தியமைக்க இலங்கை பெற்றோலிய  கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி 311 ரூபாவாக இருந்த ஒக்டேன் 92 லீற்றரின் விலை 02 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

ஒக்டேன் 95 லீற்றர் பெற்றோலின் விலை மாற்றமின்றி 371 ஆக உள்ளது.

லங்கா ஒயிட் டீசலின் விலை 03 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 286 ரூபாவாகும்.

லங்கா சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை ரூபாவில் மாற்றமடையாது அதன் விலை 313 ஆக உள்ளது

இலங்கை மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 05 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 188 ரூபாவாகும்.



VIDEOS

Recommended