• முகப்பு
  • இலங்கை
  • பேருவளை கெச்சிமலை தர்காவில் வருடாந்த புனித ஸஹீஹுல் புஹாரி - முஸ்லிம் ஹதீஸ் கிரந்தங்களின் பராயண தமாம் நிகழ்வு

பேருவளை கெச்சிமலை தர்காவில் வருடாந்த புனித ஸஹீஹுல் புஹாரி - முஸ்லிம் ஹதீஸ் கிரந்தங்களின் பராயண தமாம் நிகழ்வு

பேருவளை பீ.எம் முக்தார்

UPDATED: Dec 1, 2024, 9:34:56 AM

வரலாற்றுப் புகழ்மிகு பேருவளை கெச்சிமலை தர்காவில் வருடாந்த புனித ஸஹீஹுல் புஹாரி - முஸ்லிம் மற்றும் மஷ்ரவுர்ரவி ஹதீஸ் கிரந்தங்களில் பராயண மஸ்லிஸின் தமாம் வைபவம் எதிர்வரும் டிசம்பர் 8ஆம் திகதி (2024-12-08) ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெறும்.

சங்கைக்குரிய அஷ்ஷெய்ஹ். மெளலவி ஸக்கி அஹ்மத் (அஷ்ரபி) பின் அஷ்ஷெய்ஹ். காலிப் அலவி ஹாஜியார் அலவிய்யத்துல் காதிரி தலைமையில் நடைபெறும் இம் மஜ்லிஸில் ஸாதாத்மார்கள், உலமாக்கள், புத்திஜீவிகள், அலவிய்யா தரீக்கா உட்பட ஏனைய தரீக்காக்களின் முர்தீன்கள், நாட்டின் பல பகுதிகளையும் சேர்ந்த முஸ்லிம்கள் பங்குபற்றுவர்.

கடந்த நவம்பர் மாதம் 04ஆம் திகதி அதிகாலை மேற்படி ஹதீஸ் பராயண மஸ்லிஸ் ஆரம்பமானது. 

வெள்ளிக்கிழமை தவிர தொடர்ந்து 29 நாட்கள் மஜ்லிஸ் இடம் பெற்று டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி (2024-12-08) ஞாயிற்றுக்கிழமை தமாம் வைபவத்துடன் நிறைவு பெறும்.

இலங்கை வானொலி முஸ்லிம் சேவை தமாம் நிகழ்ச்சிகளை 73வது வருடமாக நேரடியாக அஞ்சல் செய்யவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. 

டிசம்பர் 7ஆம் திகதி தர்காவில் அடக்கப்பட்டுள்ள ஆத்மீக ஞானி அஷ்ஷெய்ஹ். அஷ்ரப் வலியுல்லாஹ் ஸியாரத்தில் ஸியாரத் நிகழ்ச்சியும், கத்தாத் ரதீப் மஜ்லிஸும், துஆப் பிரார்த்தனையும், மார்க்கச் சொற்பொழிவும் இடம்பெறும். 

08ஆம் திகதி அதிகாலை அல்குர்ஆன் தமாம் நிகழ்வு இடம் பெறவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பேருவளை பொலிஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வர்.

 

VIDEOS

Recommended