எரிபொருள் விலை மாற்றம் இன்று இரவு -அதிகாரி தெரிவிப்பு

இர்ஷாத் ரஹ்மதுல்லா

UPDATED: Jun 30, 2024, 9:26:31 AM

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்தபடி, இன்று இரவு எரிபொருள் விலை மாற்றம் இடம்பெற உள்ளது.

மாதாந்திர எரிபொருள் திருத்தத்தின் அடிப்படையில் இந்த விலை மாற்றம் மேற்கொள்ளப்படும் என அமைச்சின் அதிகாரி ஒருவர் கூறினார்.

எனினும், டீசல் விலை குறைக்கப்பட்டாலும், பேருந்து கட்டணம் மீண்டும் குறைக்கப்படாது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் விலை மாற்றத்துடன், பேருந்து கட்டணம் ஐந்து வீதம் குறைக்கப்படும், இது இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ளது.

இதற்கமைவாக, குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 28 ரூபாவாக அறிவிக்கப்படவுள்ளது.

 

VIDEOS

Recommended