• முகப்பு
  • இலங்கை
  • 3 நிமிடம் 18 நொடிகளில் 140 பெருக்கல் கணக்குகளுக்கு  சோழன் உலக சாதனை படைத்த காத்தான்குடி சிறுமி ஸீனத்

3 நிமிடம் 18 நொடிகளில் 140 பெருக்கல் கணக்குகளுக்கு  சோழன் உலக சாதனை படைத்த காத்தான்குடி சிறுமி ஸீனத்

இர்ஷாத் றஹ்மத்துல்லா

UPDATED: Oct 17, 2024, 9:50:09 AM

காத்தான்குடியில் வசித்து வரும் முஹமட் பஸ்லி மற்றும் ஸமீலா ஆகியோரின் மகள் 9 வயதான ஸீனத்.சோழன் உலக சாதனை புத்தக நிறுவனம் மற்றும் பீபல்ஸ் ஹெல்பிங் பீபில்ஸ் பவுண்டேஷன் போன்ற நிறுவனங்கள் இணைந்து நடத்திய இந்த நிகழ்வின் போது சிறுமி ஸீனத் 3 நிமிடம் 18 நொடிகளில் 140 பெருக்கல் கணக்குகளுக்கு அபாகஸ் முறை மூலம் தீர்வெழுதி உலக சாதனை படைத்தார். 

original/dofoto_20241017_121423471_copy_819x655
இந்த நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடியில் அமைந்துள்ள மீரா பாலிகா தேசிய பாடசாலையில் வைத்து நடைபெற்றது.

நிகழ்வைத் தலைமையேற்று நடத்தினார் சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவர் திரு.கதிரவன் த.இன்பராசா.

முதன்மை விருந்தினர்களாக காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையின் தலைமை ஆசிரியர் திரு.அஷ்ஷெய்க் அல் மன்சூர் மற்றும் ஷிப் அபாகஸ் அமைப்பின் இலங்கை நாட்டின் தலைவர் திரு.றிஷாட் ரஹீம் போன்றோர் பங்கு கொண்டு உலக சாதனை படைத்த சிறுமியை பாராட்டி சிறப்புரையாற்றினார்கள்.

சிறப்பு விருந்தினர்களாக ஷிப் அபாகஸ் அமைப்பின் அபிவிருத்தி முகாமையாளர் திரு.இன்ஷாப் நவாஸ் மற்றும் காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையின் துணைத் தலைமை ஆசிரியர் திருமதி.நிருஷினி பிரதீபன் போன்றோர் உலக சாதனைச் சிறுமியை வாழ்த்தி உரையாற்றினார்கள்.

original/1729158401936
சோழன் உலக சாதனை படைத்த சிறுமி ஸீனத்திற்கு சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், தங்கப் பதக்கம், நினைவுக் கேடயம், அடையாள அட்டை, மற்றும் பைல் போன்றவை சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவர் திரு.கதிரவன் த. இன்பராசா, திருகோணமலை மாவட்டத் தலைவர் திரு. தனராஜ், மட்டக்களப்பு மாவட்டப் பொதுச் செயலாளர் திரு.சிவ வரதகரன் மற்றும் செயற்குழு உறுப்பினர்களான திரு.பர்சான் போன்றோர் வழங்கிப் பாராட்டினார்கள்.

தனது அதிக ஞாபகத் திறன் மூலம் சோழன் உலக சாதனை படைத்த சிறுமியை பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வியந்து வாழ்த்திப் பாராட்டினார்கள்.



VIDEOS

Recommended