புத்தளம் நகர மையத்தில் அமைந்துள்ள பொதுமக்கள் பூங்காவில் கவனம் செலுத்துங்கள்
இர்ஷாத் ரஹ்மதுல்லா
UPDATED: Jun 11, 2024, 1:29:57 PM
புத்தளம் நகர சபையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள பொதுமக்கள் பூங்காவில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுவது தொடர்பில் நகர சபையின் செயலாளரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புத்தளம் நகர சபையின் உள் நுழைகின்ற பகுதியில் காணப்பட்ட மின் விளக்கும் பழுதடைந்த நிலையில் இருப்பதுடன் அவை திருத்தப்பட வேண்டும் என்று பல வாரங்களாக கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையிலும் அது இன்னும் இடம் பெறவில்லை.
காலை 7:30 மணி முதல் மாலை 7.30 மணி வரை இந்த பூங்கா திறந்திருக்கிறது இந்த பூங்காவை குறிப்பாக பாடசாலை மாணவர்கள் அதிகமாக பயன்படுத்துவதாகவும் தெரிய வருகிறது.
அதே வேளை புத்தலம் நகர சபையின் இந்த பூங்காவுக்குள் நிர்மாணிக்கப்பட்டிருந்த மேல் மாடி பகுதி ஒன்றும் சேதமடைந்து காணப்படுகிறது.
குறிப்பாக பாரிய மரத்தின் நடுவே இந்த சிறிய ஒரு கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது இது சிறுவர்கள் படிகளில் ஏறி அங்கிருந்து முழுமையாக இந்த மைதானத்தை பார்ப்பதற்கான வசதியாகவே இருந்து வந்துள்ளது.
தற்பொழுது அதனது படிகல் சேதம் அடைந்திருப்பதனாலும் பாரிய மரத்தின் உள் பகுதி அமைந்திருப்பதாலும் எந்த சந்தர்ப்பத்திலும் உடைந்து விடலாம் என்ற அச்சம் பூங்காவுக்கு வருகின்றவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் புத்தளம் மாவட்ட செயலாளர், எச்.எம் ஹேரத் மற்றும் புத்தளம் நகர சபையின் செயலாளர் ஆகியோரின் கவனத்திற்கு இந்த தி கிரேட் இந்தியா நியூஸ் கொண்டு செல்லுகிறது.