திரைப்பட பாடகர்கள் மறைந்தும் மக்கள் மனதில் நினைவாக வாழுபவர்கள் இலங்கையில் இன்று
இர்ஷாத் ரஹ்மதுல்லா
UPDATED: Jun 10, 2024, 6:45:06 AM
திரைப்பட பாடகர்கள் மறைந்தும் மக்கள் மனதில் நினைவாக வாழும் கலைமாாமணி இசை மேதை பத்மஸ்ரீ டாக்டர் டி.எம்.சௌந்தரராஜன்,கலைமாமணி இசை சக்கரவா்தி சீர்காழி கோவிந்தராஜன்,கலைமாமணி முதல் பின்னணி பாடகர்.திருச்சி லோகநாதன்,கலைமாமணி அதிர்வேட்டு குரலோன் டி.ஆர்.மஹாலிங்கம் ஆகியோரை நினைவு கூறும் இசை விருந்து மற்றும் கலைஞர்கள் பாராட்டு கௌரவ விழா என்பன இன்றைய தினம் கொழும்பு விவேகானந்தாமேடு கமலாமோடி மண்டபத்தில் இடம் பெற்றது.
இறை இசைத்திலகம் சிவாச்சார்யகுல பூஷணம்,பக்தி இசைப் புயல் – சிம்மக்குரலோன் டாக்டர் சிவ ஸ்ரீ சாம்ப சிவ T.M.S.மணிக்குருக்கள் தம் பதிகளின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் 50 கலைஞர்களுக்கு பாராட்டு கௌரவம் வழங்கப்பட்டதுடன்,பாடசாலை மாணவர்களுக்கான புத்தகங்களும் வழங்கப்பட்டா்ன.
ஆசியுரையினை க.செந்தில் நாத குருக்கள் வழங்கி நிகழ்வினை ஆரம்பித்தார்.ஆன்மீக விருந்தினர்களாக சிவஸ்ரீ.வைத்ய வைகுந்தி சிவாச்சார்யாா் சிவ ஸ்ரீ.வை.கமலநாத குருக்கள்,சிவ ஸ்ரீ சிவ.நேசக்குருக்கள்,சிவ ஸ்ரீ.வெங்கட சுப்ரமணிய குருக்கள், ஆகியோரின் பங்களிப்புடன்,தலைமை- குருசாமிகள் ஒன்றியத்தின் ஆறுமுகம் ரவீந்திரன்,முன்னிலை-T.V.D.கதிரேசன் (பெரி),வாழ்த்துரை குருசாமிய ஒன்றிய சு.ரவீந்திர குமார்,மற்றும் வரவேற்புரையினை டாக்டர் சாம்ப சிவமணிக்குருக்கள் ஆகியோரினால் வழங்கப்பட்டது.
பிரதம அதிதிகளாக தொழிலதிபர்.சமூக ஆர்வலர் ஸ்ரீவாசம் லோகநாதன் மற்றும் அருணாச்சலம் சந்திரசேகரம் (குருசாமி) ஆகியோரும்,சிறப்பு விருந்தினர்களாக திருமதி.வேல்ராணி கார்த்திகேசு ,கலைஞர் .விஜயராஜ்,ஈஸ்வரன் கணேஷண் உள்ளிட்ட அன்பு விருந்தனர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
ALSO READ | ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஆட்சியே சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பு கவசமாகும் - சுப்பையா ஆனந்தகுமார்
இதன் போது இலங்கையின் புகழ் பெற்ற ரட்ணம் ரத்னதுரையின் சித்தார இசைக்குழுவின் இசையில் தென் இந்திய பாடகர் கலைமாமணி T.L.மஹாராஜன், கலைமோகன் இவர்களுடன் மணிக்குறுக்களும் சேர்ந்து மற்றும் இலங்கை இளம் பாடசகர்களின் பங்குபற்றுதலுடன் பாடல்களும் இடம் பெற்றன.
நிகழ்ச்சிகளை – உறுதுணையாளர் தமிழ் பேராசிரியர் டாக்டர் .பிரம்மஸ்ரீ சசாங்கன் சர்மா தொகுத்து வழங்கினார்.