• முகப்பு
  • இலங்கை
  • ஜனாதிபதித் தேர்தலுக்கு வாக்குப்பெட்டிகளை தயார்படுத்துமாறு, தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு பணிப்பு

ஜனாதிபதித் தேர்தலுக்கு வாக்குப்பெட்டிகளை தயார்படுத்துமாறு, தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு பணிப்பு

ஐ. ஏ. காதிர் கான்

UPDATED: Jun 18, 2024, 12:54:32 PM

  எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்குத் தேவையான வாக்குப் பெட்டிகளைத் தயார்படுத்துமாறு, தேர்தல்கள் ஆணைக்குழுவினால் ஏற்கெனவே அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

  எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நிச்சயமாக ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளதால், வாக்குப்பெட்டிகள் ஏற்கெனவே அமைந்திருந்தவாறே தயாரிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

   வாக்குச் சாவடிகள் தொடர்பிலான விவரங்கள் கிடைத்தவுடன், வாக்குப் பெட்டிகளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், அவற்றை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வாக்குப்பதிவுகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட ஏராளமான வாக்குப்பெட்டிகள், தற்சமயம் சேதமடைந்துள்ளதாகவும், அவற்றை அரசினால் தொழிற்சாலைக்கு அனுப்பி சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தேர்தலை இலக்காகக் கொண்டு அதிகாரிகள் கணக்கெடுப்பு விரைவில் நடத்தப்படும் எனவும் தெரிவித்த ரத்நாயக்க, தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களுடன் இது தொடர்பாக அடுத்த வாரம் விரிவாக கலந்துரையாடப்படவுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவுகள் குறித்தும் அங்கு விவாதிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

 ஜனாதிபதித் தேர்தல், செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் திட்டமிட்டபடி நடைபெறும் என, தேர்தல் ஆணைக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

VIDEOS

Recommended