• முகப்பு
  • இலங்கை
  • கற்பிட்டி பிரதேச சபையின் ஆரோக்கியமான சூழலுக்கு பயனுள்ள செயற்பாடு சிரமதானம்

கற்பிட்டி பிரதேச சபையின் ஆரோக்கியமான சூழலுக்கு பயனுள்ள செயற்பாடு சிரமதானம்

அரபாத் பஹர்தீன்/ சுஹைல் - முதலைப்பாளி

UPDATED: Jun 6, 2024, 10:22:18 AM

2024ஆம் ஆண்டுக்கான உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு ''ஆரோக்கியமான சூழலுக்கு பயனுள்ள செயற்பாடு'' எனும் தொணிப்பொருளிற்கு அமைய கற்பிட்டி பிரதேச சபை ஏற்பாடு செய்திருந்த சிரமதான நிகழ்வு இன்று (6) கண்டல்குழி கடற்கறையை அண்டிய பகுதியில் இடம்பெற்றது. 


1974 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வோரு ஆண்டும் ஜூன் மாதம் 05ஆம் திகதி உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றன.

 அதற்கமைய 2024ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்துக்கான கருப்பொருளாக 'ஆரோக்கியமான சூழலுக்கு பயனுள்ள செயற்பாடு' என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. அதற்கமைய உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு நாட்டின் பல பாகங்களிலும் சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் நடைபெற்று வருகின்றன.


அந்தவகையில் கற்பிட்டி பிரதேச சபையின் தலைவரான மங்கல ராமநாயக்க தலைமையில் சுற்றுலாப் பயணிகளை அதிகம் வந்து செல்லும் பிரதேசமான கற்பிட்டி கண்டல்குழி கடற்கரையை அண்டிய பகுதிகளில் இன்றைய தினம் காலை ஏற்பாடு செய்யப்பட்ட சிரமதான நிகழ்வில் பல அரச மற்றும் அரச சார்பற்ற நிருவனங்களின் உத்தியோகத்தர் கள் பங்கேற்றிருந்தனர்.

குறிப்பாக கற்பிட்டி பிரதேச சபையின் ஊழியர்கள், கற்பிட்டி பிரதேச செயலகத்தின் ஊழியர்கள், கண்டல்குழி மீனவர் சங்கஉறுப்பினர்கள், கற்பிட்டி சுற்றுலா அமைப்பு, இளைஞர் கழக உறுப்பினர்கள், கடற்படை மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் வேல்ட் விசன் நிறுவன ஊழியர்கள் என பலர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இதன்போது சூழலுக்கு தீங்கினை விளைவிக்கக் கூடிய பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் பொலித்தீன் போன்ற உக்காத பொருட்கள் சுத்தப்படுத்தப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

 

 

 

(அரபாத் பஹர்தீன்)

(படங்கள் சுஹைல் - முதலைப்பாளி)

VIDEOS

Recommended