• முகப்பு
  • இலங்கை
  • பாதுகாப்பு செயலாளரினால் தியவன்னா வெசாக் வலயம் 2024 திறந்து வைப்பு

பாதுகாப்பு செயலாளரினால் தியவன்னா வெசாக் வலயம் 2024 திறந்து வைப்பு

Irshad Rahumathulla

UPDATED: May 24, 2024, 3:52:43 AM

பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பின் தலைவர் திரு.சுதர்ஷன குணவர்தன ஆகியோரினால் இன்று (மே 23) மாலை 'தியவன்னா வெசாக் வலயம் 2024' ஆரம்பித்து வைக்கப்பட்டது.

original/img-20240524-wa0009
'புத்த ரஷ்மி' வெசாக் பண்டிகையை ஒட்டி இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

தியவன்னா வெசாக் வலயம் 2024, பாதுகாப்பு அமைச்சு மற்றும் சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

டென்சில் கொப்பேகடுவ மாவத்தை மற்றும் பத்தரமுல்ல பாதுகாப்பு அமைச்சின் வீதிகளில் அலங்கரிக்கப்பட்ட வெசாக் விளக்குகள், இரண்டு முக்கிய விருந்தினர்களினால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பம் செய்யப்பட்டன.

original/img-20240524-wa0007
சுயாதீன தொலைக்காட்சியில் 'தியவன்னா வெசாக் வலயம் 2024' இன் நேரடி ஒளிபரப்பும் ஒரே நேரத்தில் இடம்பெற்றது.

இலங்கை இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் கலாச்சார குழுக்களின் பக்தி கீ (மத பக்தி பாடல்கள்) தியவன்னா வெசாக் வலயத்தின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாக இடம்பெறுகின்றது.

“அத்தனோ வா அவேக்கிய கதானி அகதானி சா” (மற்றவர்கள் செய்ததை அல்ல, நாம் என்ன செய்தோம் என்பதை அறிந்து கொள்வோம்) என்ற தொனிப்பொருளின் கீழ் தியவன்னா வெசாக் வலயத்தில் வெசாக் விளக்கு கண்காட்சி, பக்தி கீ, வெசாக் தன்சல் விற்பனை நிலையங்கள், மூலிகை தேநீர் கடைகள், ஒளி அலங்காரங்கள், அலங்கரிக்கப்பட்ட நடமாடும் பக்தி கீ மேடை மற்றும் பல்வேறு கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெறுகின்றன. 

மேற்படி வெசாக் வலயத்தினை பாதுகாப்புச் செயலாளர் திறந்துவைத்த பின்னர், தியவன்னா வெசாக் வலயத்தின் கண்கவர் பனோரமாக்களைக் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் முக்கிய பிரமுகர்களும் கண்டுகளித்தனர்.

 

 

 

 

VIDEOS

RELATED NEWS

Recommended