சீகிரிய மற்றும் தம்புள்ள சுற்றுலா வலயங்களுக்கான அபிவிருத்திப் பணிகள் துரிதம்
ஜே.எம். ஹாபீஸ்
UPDATED: Apr 21, 2024, 9:41:22 AM
ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் நகர அபிவிருத்தி, வீடமைப்பு அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சீகிரிய மற்றும் தம்புள்ள சுற்றுலா வலயங்களுக்கான அபிவிருத்திப் பணிகளை துரிதப்படுத்தும் படி அமைச்சர் பிரசன்ன ரனதுங்க அதிகாரிகளுக்கு ஆலோசணை வழங்கியுள்ளார்.
இதற்கென ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் 30 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிட உத்ததேசிக்கப்பட்டுள்ள மேற்படி திட்டம் 2019ம் ஆண்டு நடைமுறைப்படுத்தும் போது நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக அது தாமதமடைந்திருந்தது.
எனவே அதனை துரிதப்படுத்தும் படி அமைச்சர் தமது அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
சுற்றுலா தொடர்பான அடிப்படை வசதிகளை அதிகரித்தல், புராதன சின்னங்களைப் பாதுகாத்தல், பொருளாதார அபிவிருத்தி, சுற்றாடல் பாதுகாப்பு போன்ற பல்வேறு அம்சங்களை கவனத்திற்கொண்டு மேற்படி பணிகள் துரிதப்படுத்தும் படி அவர் வேண்டியுள்ளதாக சீகிரிய, தம்புள்ள அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளும் அதிகாரிகள் குழு தெரிவித்தது.