தொழில் அமைச்சரிடம் மகஜர் கையளித்த இ.தொ.கா உறுப்பினர்கள்
அமைச்சின் ஊடகப்பிரிவு
UPDATED: Jul 10, 2024, 6:50:26 AM
தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த வேதனம் 1700 ரூபாய் வழங்க கோரி தொழில் அமைச்சின் செயலாளரால் வெளியிடப்பட வர்த்தமானியை எதிர்த்து மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட முறையீட்டினை பரிசீலனை செய்து இடைக்ககால தடை உத்தரவை பெற்றுக்கொண்டு 1700 ரூபாய் சம்பளம் வழங்க மறுக்கும் தோட்ட கம்பணிகளுக்கு எதிராக மக்கள் எதிர்ப்பு போராட்டங்களை நடாத்தி வருகின்றனர்.
இதன் ஓர் அங்கமாம கொழும்பின் வெவ்வேறு இடங்களில் நேற்று(09) இடம்பெற்ற இந்த எதிர்ப்பு போராட்டத்தில் நுவரெலியா மாவட்டம் உள்ளிட்ட நாட்டில் பெருந்தோட்டப் பகுதிகளை சேர்ந்த பெருந்திரளான தொழிலாளர்கள் கொழும்புக்கு விஜயத்தை மேற்கொண்டு ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதன்போது போராட்டம் நிறைவின் பின்னர் வருகை தந்திருந்த இதொ.கா தோட்ட தலைவர், தலைவிமார்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் அடங்கிய குழுவினராள் நாராஹேன்பிட்டியவில் அமைந்துள்ள தொழில் அமைச்சிக்கு நேரடியாக சென்று விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் தொழில் அமைச்சர் மனுச நானயக்கார அவர்களிடம் மகஜர் ஒன்றினையும் கையளித்தனர்.
இந்த மகஜரில் "தோட்ட தொழிலாளர்களுக்கா னநாளாந்த வேதனமான 1700 ரூபாய் வழங்கப்பட வேண்டும் என்றும் இது வரைக்காலமும் வழங்கப்பட்டுவந்த அனைத்துவிதமான சலுகைகளையும் தொடர்ச்சியாக எமக்கு கிடைக்கப்பெற வேண்டும் என்றும்" குறிப்பிடப்பள்டுள்ளது.
மேலும் இந்த மகஜரை பெற்றுக்கொண்ட அமைச்சர் மனுச நானயக்கார, இது தொடர்பாக பரிசீலித்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக வருகை தந்தவர்களிடம் உறுதியளித்த அவர் நிச்சயமாக உங்களுக்கான 1700 ரூபாய் நாளாந்த வேதனத்தை பெற்றுக்கொடுப்பதாகவும் தெரிவித்தார்.
ALSO READ | ஒரே டிக்கெட்டில் பயணம் - செயலி உருவாக்க உத்தரவு
இதன்போது வருகை தந்திருந்த பிரதிநிதிகளால் பெருந்தோட்டதொழிலாளர்களுக்கான சம்பள உயர்வினை பெற்றுத்தர செயற்பட்டுவரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,தொழில் அமைச்சர் மனுச நானயக்கார, நீர் வழங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோர்களுக்கு நன்றியினையும் தெரிவித்தனர்.