• முகப்பு
  • இலங்கை
  • 5 நிமிடங்களுக்குள் கவிதை எழுதி, AI தொழில்நுட்பத்தின் மூலம் பாடல் வெளியீட்டு சோழன் உலக சாதனை படைத்த மாணவர்கள்

5 நிமிடங்களுக்குள் கவிதை எழுதி, AI தொழில்நுட்பத்தின் மூலம் பாடல் வெளியீட்டு சோழன் உலக சாதனை படைத்த மாணவர்கள்

இர்ஷாத் றஹ்மத்துல்லா

UPDATED: Nov 9, 2024, 1:02:11 PM

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் கல்வி கற்று வரும் மாணவர்களானப்ராங்க் மிலன் லியோன், ரோஹித், யானுவர்ஷன் மற்றும் ஜோனதன் போன்றோர் கடந்த பல மாதங்களாக AI தொழில்நுட்பத்தின் பல்வேறு வாய்ப்புகளைப் பற்றி தேடிக் கற்று அதன் அடிப்படையில் அவர்கள் மேற்கொண்ட முயற்சி சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான அலுவலக ரீதியிலான நிகழ்வு மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் வைத்து சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் நடுவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. 

இதன்போது நான்கு மாணவர்களும் இணைந்து நடுவர்கள் வழங்கிய போதைப்பொருள் அற்ற உலகம் என்ற தலைப்பில் கவிதை எழுதி, அதை AI தொழில்நுட்பத்தின் மூலம் பாடலாக மாற்றி, அதே இடத்தில் வெளியிட்டனர். 

original/dofoto_20241109_182256604_copy_819x655_1
4 நிமிடங்கள் மற்றும்‌ 23 நொடிகளில் மாணவர்கள் மேற்கொண்ட முயற்சியை உலக சாதனையாகப் பதிவு செய்தனர் சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் துணைத் தலைவர் திரு. ஸ்ரீ நாக வாணி ராஜா, மட்டக்களப்பு மாவட்டத் தலைவர் திரு. கதிரவன் த. இன்பராசா, மட்டக்களப்பு மாவட்டத்தின் பொதுச்செயலாளர் திரு. சிவ வரதகரன் மற்றும் செயற்குழு உறுப்பினர் திரு. முகமது ஃபர்ஸான் போன்றோர். 

சோழன் நடுவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக பங்கு கொண்டவர்களும் இணைந்து சோழன் உலக சாதனை படைத்த நான்கு மாணவர்களுக்கும் சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் அடையாள அட்டை போன்றவற்றை வழங்கிப் பாராட்டினார்கள்.

திரு. கதிரவன் இன்பராசா அவர்கள் இந்த நிகழ்வைத் தலைமேயேற்று நடத்திய அதேவேளை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அறுவைச் சிகிச்சைத் துறையின் நிபுணர் மருத்துவர் திரு.ஜெயபாலன் ஜெயரூபன் அவர்கள் முதன்மை விருந்தினராகப் பங்கேற்று உலக சாதனை படைத்த மாணவர்களை வாழ்த்திச் சிறப்புரையாற்றினார்.

கௌரவ விருதினர்களாக புனித மிக்கேல் கல்லூரியினுடைய தலைமை ஆசிரியர் திரு.ஏ.பி. ஜோசப், சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் கனேடிய நாட்டிற்கான தலைவரின் தாயார் திருமதி. பேரின்பம் பார்வதி மற்றும் பீப்பள் ஹெல்பிங் பீப்பள் பவுண்டேஷன் சார்பாக திரு.மோசஸ் ஜேசுதாசன் போன்றோர் பங்கு கொண்டு மாணவர்களை வாழ்த்திப் பாராட்டினார்கள்.

சிறப்பு விருந்தினர்களாகப் பங்கு கொண்ட அருட்தந்தை போல் சற்குணநாயகம், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மூத்த மருத்துவ விரிவுரையாளர் மருத்துவர் ஜி. ஆர். பிரான்சிஸ்,நச்சுயியல்துறை மருத்துவர் திருமதி.பிருந்தா கோமகராஜா போன்றோர் உலக சாதனை மாணவர்களைப் பாராட்டிப் பரிசளித்தார்கள்.

நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்தியிருந்தார் மென் பொறியியலாளர் திரு.டெரி ரொஜர் லியோன் பன்னாட்டு குழந்தைகள் அவசர நிவாரணத்தின் முன்னணி வழக்கு மேலாளர் திருமதி.மதனாவதி விஜயராஜா அவர்கள் நிகழ்வைத் தொகுத்து வழங்கிய அதேவேளை,

வாகரை செயலகப் பிரிவின் நிர்வாக அலுவலர் திரு.சிவரஞ்சன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

மட்டக்களப்பு மெத்தடிஸ்ட் மத்திய கல்லூரியின் உளவியல் மற்றும் சமய ஆசிரியை திருமதி. சங்கீதா ராஜன் அவர்கள் நன்றியுரை தெரிவித்தார். 

சோழன் உலக சாதனை படைத்த மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் நான்கு மாணவர்களையும் ஆசிரியர்கள் மாணவர்கள் என அனைவரும் வாழ்த்திப் பாராட்டினார்கள்.

 

VIDEOS

Recommended