வேட்பாளரின் மோட்டார் சைக்கிள் பறிமுதல்! மனித ஆணைக் குழுவில் முறைப்பாடு
வவுனியா
UPDATED: Oct 21, 2024, 6:23:18 PM
வவுனியா வீரபுரம் பகுதியில் வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த தமிழரசுக்கட்சியின் வன்னிமாவட்ட வேட்பாளரின் மோட்டார் சைக்கிளை நேற்றய தினம் இரவு பொலிசார் எடுத்துச்சென்றுள்ளனர்.
செட்டிகுளத்தை சேர்ந்த வேட்பாளரான ஜெகன் சிவானந்தராசா என்பவரது மோட்டார்சைக்கிளே இவ்வாறு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.
நேற்றையதினம் இரவுஎட்டு மணியளவில் மின்குமிழ் செயற்படாத காரணத்தால் வீரபுரம் கிராமத்தின் உப தபால் கந்தோருக்கு அருகாமையில் வீதியோரமாக எனது மோட்டார்சைக்கிளை நிறுத்திவிட்டு வவுனியா சென்றிருந்தேன்.
மீண்டும் அதனை எடுக்கச்சென்ற போது அந்த பகுதிக்கு வந்த செட்டிகுளம் பொலிசார், மோட்டார்சைக்கிளை எடுக்க விடாது தடுத்ததுடன், எனது சாரதி அனுமதிப்பத்திரத்தையும் பெற்றுக்கொண்டு மோட்டார்சைக்கிளை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச்சென்றனர். நான் எந்தவித குற்றமும் செய்யாமல் எனது மோட்டார் சைக்கிள் மற்றும் ஆவணங்களை அவர்கள்பெற்றுச்சென்றுள்ளனர்.
இந்நிலையில் இது தொடர்பாக தேர்தல் அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளத்துடன்,மனித உரிமை ஆணைக்குழுவிலும் முறைப்பாட்டினை பதிவுசெய்யவுள்ளதாக தெரிவித்தார்.