Breaking News.பதுலையில் விபத்து 4 பலி 3 காயமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதி
ராமு தனராஜா
UPDATED: Jul 5, 2024, 10:01:20 AM
பதுளை சொரணதொட்ட வெலிஹிட பகுதியில் இன்று (05) பிற்பகல் ஒரு லொறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழந்தும் மூவர் படுகாயமடைந்தும் உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் நீல் குமார ரத்நாயக்க (38), எஸ். ஜயசிங்க (40), டபிள்யூ.எம். நிமல் (35), மற்றும் என். கிருஷாந்த (31) ஆகியோர் உயிரிழந்ததாகவும், ஆர்.எம். சுதுபண்டா (58), டி.எம். சிறில் (39), மற்றும் டி.எம். திசாநாயக்க (40) ஆகிய மூவரும் படுகாயமடைந்த நிலையில் பதுளை போதனா வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மொனராகலையில் இருந்து வீதிகளில் பாதுகாப்பு கற்கள் பொருத்துவதற்காக வந்த லொறியிலே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், பிரேக் பழுதடைந்ததினால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு