உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு உரிய நட்டஈடு வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக
இர்ஷாத் ரஹ்மத்துல்லா
UPDATED: Jul 2, 2024, 1:24:40 AM
டெவோன்-5 பல நாள் மீன்பிடி கப்பலின் தலைவர் உட்பட உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு உரிய நட்டஈடு வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கடலில் மிதந்த பாட்டிலில் இருந்து கரைசலை குடித்ததால் இந்த துரதிர்ஷ்டவசமான மரணங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதேவேளை, Devon-5 கப்பலில் உள்ள படகு அனர்த்தத்தை கண்காணிக்கும் பொத்தான் செயற்படுத்தப்பட்டு அனர்த்தம் தொடர்பில் அறிவிக்கப்படாதமை வருத்தமளிப்பதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அவர்களுக்கு அறிவித்திருந்தால் மீட்புப் பணிகளை விரைவாக மேற்கொள்ள வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.
Dovon-5 கப்பல் நிலத்திலிருந்து 360 கடல் மைல் தூரம் அதாவது 600km க்கும் அதிகமான தூரம் பயணித்துள்ளதாக குறிப்பிட்ட திரு.டக்ளஸ் தேவானந்தா, விமானப்படை ஹெலிகொப்டர்கள் மூலம் இவ்வளவு தூரம் பயணிப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டன.
குறித்த கப்பல் பொதுவாக ஹெலிகொப்டர் பயணிக்கக்கூடிய தூரத்தை விட 04 மடங்கு தூரம் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.