பொலிஸ் மா அதிபரை விரைவில் நியமிக்கவும் - தேர்தல்கள் ஆணைக்குழு
ஐ. ஏ. காதிர் கான்
UPDATED: Jul 30, 2024, 6:15:47 PM
பொலிஸ் மா அதிபர் அல்லது பதில் பொலிஸ் மா அதிபர் ஒருவரை விரைவில் நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
பொலிஸ் மா அதிபர் பதவி தொடர்பான பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணுமாறு மேலும் கோரிக்கை விடுப்பதாகவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக் குழு, அதன் தலைமைச் செயலகத்தில் இன்று (30) மாலை கூடி ஆராய்ந்ததன் பின்னரே, இந்த முடிவை எடுத்துள்ளது.
அத்துடன், இங்கு பொலிஸ் மா அதிபர் பிரச்சினை தொடர்பாக, மிக நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான மேலும் பல விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதாக, ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு