• முகப்பு
  • இலங்கை
  • அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் புதிய தலைவராக சட்டத்தரணி அம்ஹர் ஷரீப் தெரிவு

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் புதிய தலைவராக சட்டத்தரணி அம்ஹர் ஷரீப் தெரிவு

ஐ. ஏ. காதிர் கான் / அஷ்ரப் ஏ சமத்

UPDATED: Jul 2, 2024, 11:59:09 AM

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் 74 ஆவது வருட தேசிய மாநாடு, பேரவையின் தலைவர் இஹ்ஸான் ஏ. ஹமீத் தலைமையில், கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில்  மாலை வெகு விமரிசையாக நடைபெற்றது.

 இந்நிகழ்வில் பிரதம அதிதியாக, துருக்கி உயர் ஸ்தானிகர் செமிஹ் லுட்புடகுத், கௌரவ அதிதியாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவின் தவிசாளர் சட்டத்தரணி எல்.டி.பி. தெஹிதெனிய ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது நடப்பாண்டுக்கான நிர்வாகத் தெரிவும் இடம்பெற்றது.

இதில், வை.எம். எம்.ஏ. பேரவையின் 75 ஆவது தேசியத் தலைவராக சட்டத்தரணி அம்ஹர் ஷரீப் தெரிவு செய்யப்பட்டார்.

மாவனல்லை, ஹெம்மாத்தகமையைப் பிறப்பிடமாகக் கொண்ட அம்ஹர் ஷரீப், சப்ரகமுவ மாகாணத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட வை.எம்.எம்.ஏ. பேரவையின் முதலாவது தேசியத் தலைவராவார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

VIDEOS

Recommended