• முகப்பு
  • இலங்கை
  • லெஜெண்டஸ்1979 எனும் தொணிப்பொருளில் டுபாய் நகரில் பிரமாண்ட ஒன்றுகூடல்

லெஜெண்டஸ்1979 எனும் தொணிப்பொருளில் டுபாய் நகரில் பிரமாண்ட ஒன்றுகூடல்

இர்ஷாத் ரஹ்மதுல்லா

UPDATED: May 13, 2024, 3:57:42 PM

பம்பலப்பிட்டி கொழும்பு இந்துக் கல்லூரி 98 ஆம் ஆண்டு உயர்தரப் பிரிவு மாணவர்களின் 45 ஆவது பிறந்த தின ஒன்றுகூடல் நிகழ்வு டுபாய் நகரில் பிரமாண்டமான முறையில் இடம்பெற்றுள்ளது. 

லெஜெண்ட்ஸ்1979 எனும் தொணிப் பொருளில் கடந்த முதலாம் திகதி தொடக்கம் ஐந்து நாட்கள் இடம்பெற்ற இந்நிகழ்வில், இலங்கை உட்பட 16 நாடுகளில் இருந்து 79 பேர் கலந்து கொண்டனர்.

பழைய மாணவரகள் மத்தியில் நல்லுறவை பேணிப் பாதுகாக்கும் நோக்கில் இடம்பெற்ற இந்த ஒன்றுகூடல் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் பாடசாலையை அடையாளப்டுத்தும் வகையில் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட ரீசேர்ட்டுக்களை அணிந்திருந்துடன். பாலைவனத்திற்கான விஜயத்தின் போது, தமிழர்களின் அடையாளத்தினை பறைசாற்றும் கலாச்சார அடையான வேட்டி அணிந்திருந்தமை அங்கு கூடியிருந்த பல நாடுகளையும் சேர்ந்த சுற்றாலாப் பயணிகளுக்கு ஆச்சரியத்தினையும் ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், கொழும்பு இந்துக் கல்லூரியின் பழைய மாணவர்களினால், தமது பாடசாலையில் மகத்துவம் மற்றும் தமிழர்களின் கலாச்சார விழுமியங்கள் தொடர்பாகவும் தமது ஒன்றுகூடலின் நோக்கம் தொடர்பாகவும் பன்நாhட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் தெளிவுபடுத்தப்பட்டமை சிறப்பம்சமாகும்.

இந்த ஒன்றுகூடலை முன்னிட்டு, சிவமயூரன் மற்றும் கஜமுகன் ஆகிய சக நண்பர்களினால் தென்னிந்தி திரையிசை பாடல்களுக்கு நிகரான பாடல் ஒன்று தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

VIDEOS

Recommended