கிணறு ஒன்றில் 9 வயதுச் சிறுவன் வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் கம்பளையில் பதிவு
ஜே.எம். ஹாபீஸ்
UPDATED: Apr 17, 2024, 8:16:27 AM
நீண்டகாலமாக பாவிக்காது கைவிடப்பட்டிருந்த பாதுகாப்பற்ற பாழும் கிணறு ஒன்றில் 9 வயதுச் சிறுவன் வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று கம்பளை, அம்பகமுவ வீதியில் இடம் பெற்றுள்ளது.
ALSO READ | துபாயில் ஒரு வருட மழை ஒரே நாளில் பெய்தது
இது பற்றி மேலும் தெரிய வருவதாவது-
கம்பளை நகரின் அம்பகமுவ வீதியில் உள்ள பழைய பாதுகாப்பற்ற கிணற்றில் உயிரிழந்தவர் கொழும்பு ஜாவத்த பிரதேசத்தில் வசிக்கும் 9 வயது சிறுவனாகும். மேற்படி சிறுவன் மற்றும் அவனது பெற்ரே்கள் நோன்புப் பெருநாள் விடுமுறைக்காக கம்பளையில் உள்ள அவர்களது குடும்ப வீட்டிற்கு சென்றிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. அங்கு சிறுவன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில்
தாய் தனது மகனைக்காணாது தேடியுள்ளார். அப்பகுதி மக்களும் சேர்ந்து தேடியுள்ளனர். பிரதேசவாசிகள் வீட்டுக்கு அருகில் சுமார் 25 மீட்டர் தொலைவில் உள்ள பாதுகாப்பற்ற கைவிடப்பட்ட கிணற்றில் தேடிய போது சிறுவனின் சடலத்தைக் கண்டுள்ளனர்.
அதனையடுத்து, சிறுவனை உடனடியாக கம்பளை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற போதும் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதற்கு முன்னரும் இதே பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து பெண் ஒருவரும் சிறு குழந்தையும் உயிரிழந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். மேற்படி பாழும் கிணற்றை பொலீசார் பரிசோதிப்தை படத்தில் காணலாம். இது தொடர்பாக கம்பளைப் பொலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.