10 இன் அடுக்குகளை அவற்றின் 100 ஆம் அடுக்குகள் வரையும் ஆங்கில மொழியில் கூறிய 4 வயது சிறுவன்
இர்ஷாத் றஹ்மத்துல்லா
UPDATED: Oct 30, 2024, 3:39:00 AM
10 இன் அடுக்குகளை அவற்றின் 100 ஆம் அடுக்குகள் வரையும் ஆங்கில மொழியில் கூறிய 4 வயது சிறுவன், மிகப் பெரிய எண்களை இலகுவாக ஆங்கில மொழியில் கூறியும் சோழன் உலக சாதனை படைத்தார்.
திருகோணமலை மாவட்டம் கிண்ணியாவில் வசித்து வரும் இயன்முறை மருத்துவர்களான திரு.மொஹமட் நஸ்மி மற்றும் திருமதி. பாதிமா பாசீஹா போன்றோரின் 4 வயது மகனான மொஹமட் அக்லாம் பிலால் கணித அடுக்குகளின் விதிகள்
(Low of Exponents)
முறையில் 10 இன் அடுக்குகளை அவற்றின் 100 ஆம் அடுக்குகள் வரையும், மிகப் பெரிய எண்களை இலகுவாகவும் ஆங்கில மொழியில் கூறியும் சோழன் உலக சாதனை படைக்கும் முயற்சி மேற்கொண்டார்.
இவருடைய உலக சாதனை முயற்சியை முறைப்படி கண்காணித்த சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் நடுவர்களான மட்டக்களப்பு மாவட்டத் தலைவர் திரு. கதிரவன் இன்பராசா, திருகோணமலை மாவட்டத் தலைவர் திரு. தனராஜ், திருகோணமலை மாவட்டப் பொதுச் செயலாளர் திரு.சுயந்தன் விக்னேஸ்வர ராஜா மற்றும் செயற்குழு உறுப்பினர் திரு. மொஹமட் பர்சான் போன்றோர் உலக சாதனையை உறுதி செய்து சாதனை சிறுவனுக்கு சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், தங்கப் பதக்கம், நினைவுக் கேடயம், அடையாள அட்டை மற்றும் பைல் போன்றவற்றை சிறப்பு விருந்தினர்களாக பங்கு கொண்டவர்களுடன் இணைந்து வழங்கிப் பாராட்டினார்கள்.
இந்த நிகழ்வு கிண்ணியா மத்திய கல்லூரியில் நடைபெற்ற அதேவேளை சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனம் மற்றும் பீபல்ஸ் ஹெல்பிங் பீபில்ஸ் பவுண்டேஷன் போன்ற அமைப்புகள் இணைந்து நடத்தியிருந்தன.
இந்த நிகழ்வினை கதிரவன் இன்பராசா அவர்கள் தலைமையேற்று தொடங்கி வைக்க கின்னியா பிரதேச செயலாளர் திரு.மொஹமட் கனி அவர்கள் முதன்மை விருந்தினராகப் பங்கு கொண்டார்.
கிண்ணியா வளையக்கல்வி பணிப்பாளர் திருமதி.முனவ்வரா, கிண்ணியா மத்திய கல்லூரியின் அதிபர் திரு நஜாத்,கின்னியாவின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி மருத்துவர் திரு.சமீம் மற்றும் குறிஞ்சாகேணி சுகாதார வைத்திய அதிகாரி மருத்துவர் அஜித் போன்றோர் சிறப்பு விருந்தினராக பங்கு கொண்டு சோழன் உலக சாதனை படைத்த சிறுவனை வாழ்த்தி சிறப்புரையாற்றினார்கள்.
விவசாயத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் கலாநிதி திரு.ஹூஸைன், கிண்ணியா அல்-அக்ஸா கல்லூரியின் அதிபர் திரு.முனவ்பர், கிண்ணியா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் அதிபர் திருமதி.நஸீரா நஜாத் போன்றோர் கௌரவ விருந்தினர்களாகப் பங்கு கொண்டு சிறுவன் அக்லான் பிலாலை மேடையில் வாழ்த்திப் பாராட்டிப் பேசினார்கள்.
கிண்ணியாவின் பிரதேச செயலாளர் அவர்களின் சிறப்புரையைத் தொடர்ந்து உலக சாதனை படைத்த சிறுவனின் தந்தை நன்றியுரையாற்றினார்.
இச் சிறிய வயதில் உலக சாதனை படைத்த சிறுவன் அக்லான் பிலாலை பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஊர் மக்கள் என பலரும் வியந்து பார்த்து வாழ்த்திப் பாராட்டினார்கள்.
இந்தியாவில் இருந்து நேரலையில் நிகழ்வைக் கண்காணித்துக் கொண்டிருந்த சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் நிறுவனர் முனைவர் நீலமேகம் நிமலன் மற்றும் சிறப்பு நடுவர் திரு.சிவ ஷங்கரன் போன்றோர் சோழன் உலக சாதனை படைத்த சிறுவனை பாராட்டி வாழ்த்தினார்கள்.
( 4 හැවිරිදි පිරිමි ළමයෙකු ඉංග්රීසියෙන් 10 සිට 100 වැනි බලතල දක්වා කියූ ඉංග්රීසියෙන් විශාලතම සංඛ්යා පහසුවෙන් කථා කිරීම සඳහා චෝලන්
ලෝක වාර්තාවක් තැබීය.
ත්රිකුණාමලය දිස්ත්රික්කයේ කිනියා ප්රදේශයේ පදිංචි වන
භෞත චිකිත්සකයින්
වෛද්යවරුන් වන මොහොමඩ් නස්මි මහතා සහ පතිමා පාසීහා මැදිරියගේ අවුරුදු 4 ක පොත්රයා වූ මොහොමඩ් අක්ලාම් බිලාල්, ගණිත බල පංකතිය (Law of Exponents) මගින් 10 ක බල පංකති 100 වෙනි බලයටද, විශාල සංකේත ඉතා පහසුවෙන්ද, ඉංග්රීසි භාෂාවෙන්ද කියා, චෝලන් ලෝක වාර්තාවක් පිහිටුවීම සඳහා උත්සාහයක් ගත්තේය.
මොහුගේ ලෝක වාර්තා උත්සාහය නිසි පරිදි නිරීක්ෂණය කළ චෝලන් ලෝක වාර්තා පොත් ආයතනයේ මටකලපුව දිස්ත්රික්කයේ සභාපති කතිරවන් ඉන්පරාසා මහතා, ත්රිකුණාමලය දිස්ත්රික්කයේ සභාපති ධනරාජ් මහතා, ත්රිකුණාමලය දිස්ත්රික්කයේ මහලේකම් සයන්තන් විග්නේෂ්වර රාජා මහතා සහ කාරක සභා සාමාජික මොහොමඩ් පර්සාන් මහතා මෙන්ම, විශේෂ ආරාධිතයින් ලෙස සහභාගී වූ අමුත්තන් සමඟ එක්ව, ලෝක වාර්තාකරුවන්ට ලබා දුන් සම්මානපත්රය, රන් පදක්කම, සම්මත සාක්කිය, හැඳුනුම්පත සහ පටුවනේල් පෝරුව මෙන්ම ගෞරවය දක්වමින් පිරිනැමුවාහ.
මෙම උත්සවය කින්නියා මධ්ය මහා විද්යාලයේදී පැවැත්වුණු අතර එය චෝලන් වර්ල්ඩ් බුක් ඉන්ස්ටිටියුට් සහ පීපල්ස් හෙල්පින් පීපල්ස් ෆවුන්ඩේෂන් විසින් සම සත්කාරකත්වය සපයන ලදී.
කතිරවන් ඉන්බරාසා මහතාගේ ප්රධානත්වයෙන් පැවැති මෙම උත්සවයේ ප්රධාන ආරාධිතයා ලෙස කින්නියා ප්රාදේශීය ලේකම් මොහොමඩ් ගානි මහතා සහභාගි විය.
කිනියා අධ්යාපන කොට්ඨාසයේ අධ්යාපන අධ්යක්ෂිකා මුනවරා මහත්මිය, කිනියා මධ්ය මහා විද්යාලයේ ප්රධානොචාරය නජාත් මහතා, කිනියා ප්රදේශයේ ජ්යෙෂ්ඨ වෛද්ය නිළධාරී සාමීම් මහතා සහ කුරින්චාගේණි සෞඛ්ය වෛද්ය නිළධාරී අජිත් වෛද්යවරයා වැනි විශේෂ ආරාධිතයින් ලෙස සහභාගී වෙමින් සෝලන් ලෝක වාර්තාවක් පිහිටුවූ ළමයාට සුභ පැතුම් එක්කමින් විශේෂ කතාවක් පවත්වා සිටියහ.
කෘෂිකර්ම දෙපාර්තමේන්තුවේ හිටපු අධ්යක්ෂ හුසේන්, කින්නියා අල්-අක්සා විද්යාලයේ විදුහල්පති මුනවුෆර්, කින්නියා මුස්ලිම් කාන්තා විද්යාලයේ විදුහල්පති නසීරා නජාඩ් යන මහත්ම මහත්මීන් ගෞරවනීය ආරාධිතයන් ලෙස සහභාගී වී වේදිකාවේ සිටි ඇක්ලාන් බිලාල් ළමයාට සුබ පතමින් ප්රශංසා කළහ.
කින්යා ප්රාදේශීය ලේකම්වරයාගේ ප්රධාන දේශනයෙන් අනතුරුව ලෝක වාර්තාවට හිමිකම් කියන පියාගේ ස්තුතිය පුද කළේය.
මේ තරුණ වියේදීම ලෝක වාර්තාවට හිමිකම් කී අක්ලාන් බිලාල් පාසලේ ගුරුවරුන්, සිසුන් සහ ජනතාවගේ ප්රසාදයට හා පැසසුමට ලක් විය.
ඉන්දියාවේ සිට මෙම අවස්ථාව සජීවීව නරඹමින් සිටි චෝලන් ලෝක වාර්තා පොත් ආයතනයේ නිර්මාතෘ ආචාර්ය නීලමේගම් නිමලන් සහ විශේෂ විනිසුරු ශිව ශංකරන් මහතා චෝලන් ලෝක වාර්තා හිමි පිරිමි ළමයාට සුබ පැතුම් එක් කළහ.)