• முகப்பு
  • இலங்கை
  • புத்தளம் மாவட்டத்தில் 8 எம். பி.இடங்களுக்கு 429 வேட்பாளர்கள்

புத்தளம் மாவட்டத்தில் 8 எம். பி.இடங்களுக்கு 429 வேட்பாளர்கள்

அரபாத் பஹர்தீன்

UPDATED: Oct 11, 2024, 5:47:33 PM

பாராளுமன்றத் தேர்தலுக்காக புத்தளம் மாவட்டத்தில் 24 பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் உள்ளிட்ட மொத்தம் 39 கட்சிகள் போட்டியிடுகின்றன.

எதிர்வரும் நவம்பர் 14 ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஒக்டோபர் 4 முதல் 11 ஆம் தேதி வரை தாக்கல் செய்யப்பட வேண்டும், என இலங்கை தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்றைய (11) நாள் நண்பகல் 12 மணி வரை புத்தளம் மாவட்ட செயலகத்தில் வேட்புமனுத்தாக்கல்கள் ஏற்கப்பட்டது. இதற்குப் பிறகு, 12 மணியுடன் 1.30 மணிக்குள் ஆட்சேபனைச் செய்­ய கட்சிகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

புத்தளம் மாவட்ட செயலாளரும், தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான எச்.எம்.எஸ்.பி. ஹேரத் உரையாற்றுகையில், "இந்த தேர்தலில் இன்று நண்பகல் 12 மணிக்கு 26 பதிவு செய்யப்பட்ட கட்சிகள் மற்றும் 18 சுயோட்சை குழுக்கள் மொத்தம் 44 கட்சிகள் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்துள்ளன.

பின்னர், 2 பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் 3 சுயோட்சை குழுக்கள் அடங்கிய 5 கட்சிகளின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

இதனால், இம்முறை பொதுத் தேர்தலில் 24 பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் 15 சுயேட்சை குழுக்களுடன் மொத்தம் 39 கட்சிகள் போட்டியிடுகின்றன. குறிப்பாக, சிங்கள தீப ஜாதிக பெரமுன மற்றும் சமபிம கட்சிகள் நிராகரிக்கப்பட்டுள்ளன" என தெரிவித்தார்.



 

VIDEOS

Recommended