• முகப்பு
  • இலங்கை
  • 61 வீடுகள், குறித்த வீட்டுப் பயனாளிகளால் தனியார் நபர்களுக்கு வாடகைக்கும், சொந்தமாகவும் வழங்கப்பட்டுள்ளது - ஜீவன் தொண்டமான்

61 வீடுகள், குறித்த வீட்டுப் பயனாளிகளால் தனியார் நபர்களுக்கு வாடகைக்கும், சொந்தமாகவும் வழங்கப்பட்டுள்ளது - ஜீவன் தொண்டமான்

இர்ஷாத் றஹ்மத்துல்லா

UPDATED: Dec 13, 2024, 5:31:30 AM

நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் (DCC) நேற்றைய தினம் (12), அதன் தலைவர் T.M.சுரவீர ஆராய்ச்சி அவர்களின் தலைமையில் நுவரெலியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றிருந்தது.

2024 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற பொதுத் தேர்தலின் பின்னர் நடைபெற்ற குறித்த முதலாவது மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர் நந்தன கலபட, உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் உட்பட அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களின் பிரதானிகள் என பலர் பிரசன்னமாகி இருந்தார்கள்.

மேலும், நேற்று நடைபெற்ற நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கலந்துக்கொண்ட  ஜக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் பின்வருமாறு கருத்து தெரிவித்தார்.

 

சீரற்ற காலநிலை காலப்பகுதிகள் தோட்டப் புறங்களில் ஒவ்வொரு வருடமும் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட வீடுகள் பல இருக்கின்றன.

அதாவது பெருந்தோட்டங்களுக்கு சுமார் ஒரு இலட்சத்து 57 ஆயிரம் வீடுகள் தேவைப்படுகின்றது. ஆனால் குறித்த வீடுகளை உடனடியாக நிர்மாணிப்பது என்பது முடியாத விடயமாக இருந்தாலும், தற்போதைய சூழ்நிலையில் ஒரு வீட்டினை கட்டி முடிப்பதற்கு 3.2 மில்லியன் ரூபாய் செலவாகும். இவ்விடயம் தொடர்பாக இந்திய அரசாங்கத்திடமும் நான் ஏற்கனவே கலந்துரையாடியுள்ளேன்.

அண்மையில் நிலவிய சீரற்ற காலநிலையினால் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட அனர்த்தங்களுக்கு உள்ளான பிரதேசங்களுக்கு விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டதுடன் மக்களை சந்தித்து நிவாரணப் பொதிகளையும் வழங்கியிருந்தோம்.

இதன்போது, பூண்டுலோயா டன்சினன் கீழ் பிரிவிற்கு சென்று மக்களை சந்தித்த போது, இந்திய அரசாங்கத்தில் கட்டிக்கொடுக்கப்பட்ட 61 வீடுகள், குறித்த வீட்டுப் பயனாளிகளால் தனியார் நபர்களுக்கு வாடகைக்கும், சொந்தமாகவும் வழங்கப்பட்டுள்ளமையை கண்டறிந்துக்கொள்ள முடிந்தது.

இது தொடர்பாக இந்திய உயர்ஸ்த்தானிகருக்கும், எல்பிட்டிய பெருந்தோட்ட நிறுவன முகாமையாளர் அவர்களிடன் கலந்துரையாடி குறித்த வீடுகளை மீள பெற்று பாதிக்கப்பட்டவர்ளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சிற்க்கு அறிவித்தும் இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாத நிலையில் இப்பிரச்சினையை விரைவாக தீர்த்து வைக்குமாறு கேட்டுக்கொண்டேன்.

எனவே பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்த கருத்துக்களை பரிசீலனை செய்து விரைவில் தீர்த்து வைப்பதாக நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு (DCC) தலைவர் T.M.சுரவீர ஆராய்ச்சி அவர்கள் என்னிடம் தெரிவித்திருந்தார்.

 

 

VIDEOS

Recommended