• முகப்பு
  • இலங்கை
  • தோட்டத் தொழிலாளரின் 1,700 ரூபா நாளாந்த சம்பளம் தொழிலாளர் வாழ்வில் ஒளியேற்றிய இ.தொ.கா மலையகம் எங்கும் ஆரவாரம்!...      

தோட்டத் தொழிலாளரின் 1,700 ரூபா நாளாந்த சம்பளம் தொழிலாளர் வாழ்வில் ஒளியேற்றிய இ.தொ.கா மலையகம் எங்கும் ஆரவாரம்!...      

எஸ். தேவதாஸ்

UPDATED: Jun 4, 2024, 2:35:20 PM

நாட்டின் ஏற்றுமதித்துறையில் கணிசமான பங்களிப்பை வழங்கி வருகின்ற பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வில் ஒளிமயமான எதிர்காலத்திற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வழிசமைத்துள்ளது.

தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் 1700 ரூபா உயர்வில் மேன் முறையீட்டு நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பை வரவேற்றிருப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உப தலைவர் திருக்கேஸ் செல்லச்சாமி மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இ.தொ.கா உபதலைவர் திருக்கேஸ் செல்லசாமி வெளியிட்ட ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 84 ஆண்டுகளை கடந்த நிலையில் இந்த மகிழ்ச்;சியான தீர்ப்புக்கு இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், நிதிச்செயலாளர் மருதபாண்டி ராமேஸ்வரன் ஆகியோரது சார்பில் தமது உளப்பூர்வமான நன்றிகளை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம்.

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாக அன்றிலிருந்து இன்றுவரை மக்களோடு மக்களாக இ.தொ.கா முன்னின்று போராடி பல நாடுகளுடன் ஒப்பிடும்போது பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு பெறமுடியாத உரிமைகளை இலங்கையில் வென்றெடுத்துள்ளது.

அந்த வகையில் பெருந்தோட்டங்களின் சம்பள அதிகரிப்புக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹ எடுத்துக்கொண்ட முயற்சி பாராட்டுக்குரியதும், வரவேற்புக்குரியதுமாகும்.

தோட்டக்கம்பனிகளின் செயற்பாட்டுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மலையக மக்களின் வாழ்வில் ஒரு திருப்புமுனையாகும்.

இந்த சம்பள உயர்வு பெருந்தோட்ட மக்களின் அடிப்படை வாழ்க்கைக்கும், வாழ்க்கை மாற்றத்திற்கும் அவசியமாகும் என்பதிலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹ, தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார ஊடாக தொழிற்சங்கங்கள் மற்றும் தொழில் வழங்குனர்களை அழைத்து இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.

இதேவேளை இ.தொ.கா சார்பில் பிரதம சட்ட ஆலோசகருமான சட்டத்தரணி கா.மாரிமுத்து தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வில் ஆரமபத்திலிருந்து முழுமையான அர்ப்பணிப்போடு தனது வாத திறமைகள் மூலமாக ஆலோசனைகளை வழங்கி இதனை வெற்றி பெறச் செய்ய வேண்டுமென்பதில் இறுதிவரை உறுதியாக செயற்பட்டு வந்திருக்கிறார்.

குறிப்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹ, தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார, இ.தொ.கா தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், பொதுச்செயலாளரும், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான், நிதிச்செயலாளாரும், பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஸ்வரன், ஆகியோருக்கும், இறையருள் வேண்டியும் மலையக தோட்ட சகல தொழிலாளர்களும் நன்றி செலுத்தியவண்ணமும் பாற்சோறு பொங்கி, பட்டாசு கொழுத்தி ஆரவாரமாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருவதையும் காணமுடிகிறது.

இதனோடு கொழும்புவாழ் மலையக இளைஞர்களும் தங்களது வாழ்த்துகளை பதிவு செய்வதிலும் ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது. எதிர்காலத்தில் நாம் ஒரு குடையின்கீழ் ஒன்றினைவதன் மூலமாக பல உரிமைகளை வென்றெடுப்போமாக எனவும் உபதலைவர் திருக்கேஸ் செல்லசாமி மேலும் தெரிவித்துள்ளார்.

 

VIDEOS

Recommended