• முகப்பு
  • இலங்கை
  • 13னை தடுக்க சிலர் எத்தனித்தாலும் டக்ளஸ் தேவானந்தா அதற்கு இடம் கொடுக்க மாட்டார் என்பது உறுதி

13னை தடுக்க சிலர் எத்தனித்தாலும் டக்ளஸ் தேவானந்தா அதற்கு இடம் கொடுக்க மாட்டார் என்பது உறுதி

இர்ஷாத் றஹ்மத்துல்லா

UPDATED: Oct 29, 2024, 4:59:38 AM

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் 13 வது திருத்தச் சட்டத்தினை இல்லாது ஒழிக்க முற்பட்டிருந்தனர். இந்த வேளையில் 13னை இல்லாது செய்துவிட்டால் தமிழ் மக்களுக்கு ஒன்றேனும் கிடைக்காமல் போய்விடும் வெறும் கையாகிவிடுவர் என்ற உணர்வின் அடிப்படையில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அமரர் ஆறுமுகம் தொண்டமான் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோருடன் கலந்துரையாடி பாராளுமன்ற உறுப்பினர்கள் 51 உறுப்பினர்களுடைய கையொப்பத்தை பெற்று மஹிந்த ராஜபக்ஷவிடம், நீங்கள் 13னை இல்லாது செய்துவிட்டால் நாங்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினை வழங்காமல் விடுவோம் என்ற தொணியில் கலந்துரையாடியதன் காரணமாக அது கைவிடப்பட்டது.

டக்ளஸ் தேவானந்தா மற்றும் பத்திரிகையாளர்களுக்கிடையில் இணைய வழி கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்று இருந்தது அதன் போதே 13 பற்றி வினா விடிய போது தனது 13 குறித்த கரிசனை இவ்வாறு உள்ளது என்றவாறு இவ்விடையத்தினை குறிப்பிட்டு இருந்தார்.

original/whatsapp-image-2024-10-22-at-09
அதன் பின்னர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அந்த 13 னை முன்னெடுத்து அதனூடாகத்தான் தமிழ் மக்களினுடைய அடிப்படை உரிமைகளை வென்றெடுத்து தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களிடமும் இந்த 13னை பற்றி தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்த 13னை தடுக்க சிலர் எத்தனித்தாலும் டக்ளஸ் தேவானந்தா அதற்கு இடம் கொடுக்க மாட்டார் என்பது உறுதி என தேசிய பட்டியல் உறுப்பினர் பாபு சர்மா தெரிவித்திருந்தார்.

original/whatsapp-image-2024-10-18-at-13
இதனை தமிழ் மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள் நிச்சயம் கொழும்பில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை உருவாக்கி தங்களுக்கான அரசியல் பலத்தினை ஏற்படுத்திக் கொள்வார்கள் என்றும் பாபு சர்மா தெரிவித்திருந்தார்.

 

VIDEOS

Recommended