• முகப்பு
  • விளையாட்டு
  • இராஜபாளையத்தில் ஸ்ரீ பிஏசி ராமசாமி ராஜா நினைவு 61வது ஆண்டு மாவட்ட அளவிலான கபடி போட்டி.

இராஜபாளையத்தில் ஸ்ரீ பிஏசி ராமசாமி ராஜா நினைவு 61வது ஆண்டு மாவட்ட அளவிலான கபடி போட்டி.

அந்தோணி ராஜ்

UPDATED: May 24, 2024, 11:47:05 AM

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் சார்பில் ராம்கோ குரூப் ஸ்தாபகர் பிஏ சி ராமசாமி ராஜா நினைவு 61வது ஆண்டு கபடி போட்டி இராஜபாளையம் ஊர் காவல் படை மைதானத்தில் மூன்று நாட்கள் நடைபெறுகிறது.

இந்த கபடி போட்டி ஏற்பாடுகளை மாநில அமெச்சூர் கபடி கழக மாநில துணை தலைவர் APS ராஜா செய்திருந்தார், முதல் போட்டியை டைகர் சம்சுதீன் துவங்கி வைத்தார்.

இந்த மூன்று நாள் கபடி போட்டியில் மாவட்டத்தில் இருந்து 8 பெண்கள் அணியும் 32 ஆண்கள் அணியும் கலந்து கொள்கின்றனர்

இந்த போட்டியில் வெற்றி பெறும் இளைஞர்களுக்கு பி ஏ சி ராமசாமி ராஜா நினைவு கோப்பையும் பரிசு தொகை 40,000 வெற்றி பெறும் பணிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்பட உள்ளது.

வெற்றி பெறும் அணியினர் தமிழ்நாடு அளவில் நடைபெறும் கபடி போட்டியில் கலந்து கொள்வார்கள்.

 

VIDEOS

Recommended