கண்டி மாவட்ட 'செஸ்' சதுரங்க விளையாட்டு சங்கத்தின் வருடாந்த பரிசளிப்பு

ஜே.எம்.ஹாபீஸ்

UPDATED: Aug 11, 2024, 5:40:42 PM

கண்டி மாவட்ட 'செஸ்' சதுரங்க விளையாட்டு சங்கத்தின் வருடாந்த பரிசளிப்பு வைபவம் பொல்கொல்லயில் அமைந்துள்ள மகிந்த ராஜபக்ச கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

இவ்வைபவத்தில் பிரதம அதிதியாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே கலந்து கொண்டார்.  

மத்திய மாகாணத்தைப் பிரதிநிதித் துவப்படுத்தி வெற்றிகளை ஈட்டிய பலர் இங்கு கௌரவிக்கப்பட்டனர்.

 மாகாண மற்றும் தேசிய மட்டத்தில் பதக்கங்களை வென்ற சுமார் 600 பேர் இங்கு கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவ்வைபவத்தில் மத்திய மாகாண விளையாட்டுப்பணிப்பாளர் ஆர்.திலஸே்வரி, மாகாண கல்வி அமைச்சின் விளையாட்டுத் துறைப் பணிப்பாளர் அத்துல ஜயவர்தன, இலங்கை செஸ் சங்கத்தின் செயலாளர் கனிஷ்க வெலிபிட்டிய, இலங்கை பாடசாலைகள் செஸ் சங்கத்தின் தலைவர் மகேசிகா ரூபசிங்க கண்டி மாவட்ட செஸ் சங்கத்தலைவர் ஆர்.களுகம்பாய உற்பட பலர் கலந்து கொண்டனர்.

 

VIDEOS

Recommended