• முகப்பு
  • புதுச்சேரி
  • புதுச்சேரியில் 350 மாணவ மாணவிகளுக்கு தலா 100  ஆசிரியர்களுக்கு தலா 500 ரூபாய் குடியரசு தின விழாவில் வழங்கிய கவுன்சிலர்.

புதுச்சேரியில் 350 மாணவ மாணவிகளுக்கு தலா 100  ஆசிரியர்களுக்கு தலா 500 ரூபாய் குடியரசு தின விழாவில் வழங்கிய கவுன்சிலர்.

சக்திவேல்

UPDATED: Jan 26, 2024, 1:13:07 PM

புதுவை அடுத்த தமிழக பகுதியான கோட்டக்குப்பம் நகர் மன்றத்தில் 25வது வார்டு திமுக கவுன்சிலராக இருப்பவர் சரவணன். 

கறிக்கடை சரவணன் என்று அழைக்கப்படும் இவர். ஆட்டுக்கறி வியாபாரம் செய்து வருகிறார். 

இவரது வார்டுக்கு உட்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ளது. 

அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக கவுன்சிலர் சரவணன் பல்வேறு வகையில் நலத்திட்ட உதவிகளை தொடர்ச்சியாக செய்து வருகிறார். 

குறிப்பாக 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு அரசு பொது தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் மாணவ மாணவிகளுக்கு ரொக்க பரிசை வழங்கி வருவதோடு குழந்தைகள் தினம், ஆசிரியர் தினம், சுதந்திர தினம், குடியரசு தினம், பள்ளியின் ஆண்டு விழா போன்ற விழாக்களில் பள்ளிக்கு பரிசு பொருட்களாகவோ நிகழ்ச்சி நடத்துவதற்கு நிதியாகவோ கொடுத்து வருகிறார். 

இன்று பள்ளியில் நடந்த குடியரசு தின விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கவுன்சிலர் சரவணன், பள்ளியில் படித்து வரும் 10மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று 100% தேர்ச்சி பெற வேண்டும் என கூறி 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக ஒவ்வொரு மாணவர்களுக்கும் புது 100 ரூபாய் நோட்டை வழங்கி மாணவர்களை ஊக்கப்படுத்தினார். 

மேலும் மற்ற மாணவர்களின் மனது பாதிக்கப்படக்கூடாது என்று அவரது வீட்டில் இருந்து பணம் எடுத்து வரச் சொல்லி 350 மாணவ மாணவிகளுக்கும் தலா ரூபாய் நூறு வழங்கி உற்சாகப்படுத்தினார். 

மேலும் பள்ளியில் பணியாற்றும் 25 ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளுக்கு தலா ரூபாய் 500 வழங்கி அவர்களை ஊக்கப்படுத்தி பாராட்டினார். 

மேலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மதிப்பெண் பெரும் மாணவர்களுக்கு ரூபாய் 50,000 ரொக்க தொகை வழங்கப்படும் அறிவித்துள்ளார். 

குடியரசு தின விழாவில் பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் புது 100 ரூபாய் பணத்தை வழங்கி உற்சாகப்படுத்திய கவுன்சிலருக்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கைதட்டி உற்சாகம் அடைந்தனர்.

VIDEOS

Recommended