• முகப்பு
  • அரசியல்
  • தேர்தலில் யாரை ஆதரிப்பது? இன்று கூடும் மு.கா. - செவ்வாயன்று மக்கள் காங்கிரஸ்

தேர்தலில் யாரை ஆதரிப்பது? இன்று கூடும் மு.கா. - செவ்வாயன்று மக்கள் காங்கிரஸ்

ஐ. ஏ. காதிர் கான்

UPDATED: Aug 4, 2024, 7:39:14 AM

 ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து உத்தியோகபூர்வமான அறிவிப்பை விடுப்பதற்காக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூடித் தீர்மானிக்கவுள்ளதாக அறிவித்துள்ளன.

இதன்படி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான உச்சபீடக் கூட்டம், இன்று (04) ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணிக்கு, கொழும்பில் உள்ள கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் நடைபெறவுள்ளது.

இந்த உச்சபீடக் கூட்டத்தில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அங்கத்தவர்கள் கட்டாயமாக பங்கேற்குமாறு, கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் அழைப்பு விடுத்துள்ளார்.

முன்னதாக, கடந்த வாரத்துக்குள் மு.கா. ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமான தனது நிலைப்பாட்டைத் தீர்மானித்து அறிவிக்கும் என்று அதன் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்திருந்தபோதும், எந்தவிமான சந்திப்புக்களும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான உயர்மட்டக் கூட்டம், எதிர்வரும் (06) செவ்வாய்க்கிழமை கொழும்பில் உள்ள கட்சிக் காரியாலத்தில் நடைபெறவுள்ளது.

 அக்கட்சியின் ஏனைய உறுப்பினர்கள் சுயாதீனமாகச் செயற்படப்போவதாக அறிவித்துள்ளதோடு, அவர்கள் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் போக்கைக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், குறித்த சந்திப்பின்போதுயானை தமது கட்சி, ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் உறுதியான தீர்மானத்தினை எடுக்கும் என்றும், அத்துடன் முஸ்லிம்களின் பிரச்சினைகளை உட்படுத்தி பத்து விடயங்களை மையப்படுத்தியே அந்தத் தீர்மானம் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

 இதேவேளை, முஸ்லிம்களின் விவகாரங்கள் அடங்கிய பத்து விடயங்கள் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் வேட்பாளரிடத்தில் கையளித்து, நிபந்தனைகளின் அடிப்படையில் செயற்படவுள்ளதாகவும் மேலும் தெரிய வருகிறது.



VIDEOS

RELATED NEWS

Recommended