நாட்டில் இனவாதம் இல்லாத சுபீட்சமான வாழ்க்கையை உருவாக்குவோம் = சஜித் வாக்குறுதி
ஐ. ஏ. காதிர் கான்
UPDATED: Sep 1, 2024, 3:17:37 PM
இனவாதம் இல்லாத, சுபீட்சமான வாழ்க்கையை உருவாக்கும் பொறுப்பை தாங்கள் ஏற்போம்" என, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வாக்குறுதி அளித்தார்.
ALSO READ | இலங்கை தமிழரசு கட்சி சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு
அநுராதபுரம் நாச்சியாதீவு நகரில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் கூட்டணியின் 29 ஆவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே, அவர் இந்த வாக்குறுதியை வழங்கினார்.
கோத்தாபய ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் எரிப்பதா? நல்லடக்கம் செய்வதா? என்கின்ற பிரச்சினை எழுந்தது.
ALSO READ | இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த வாலிபர் கைது .
அதன்போது, மக்களுடைய வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய மத, கலாசார, மக்களுடைய பண்பாட்டு விடயங்களை மறந்து, தனிப்பட்ட இலாபத்திற்காகவும், வரப்பிரசாதங்களைப் பெற்றுக் கொள்வதற்காகவும் செயற்பட்டனர்.
அவர்கள் மதத்தையும், அறத்தையும், சுய கௌரவத்தையும் காட்டிக் கொடுத்து, இனவாதத்தைத் தூண்டியிருந்தனர்.
ஆனால், ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் இனவாதத்தையும் மதவாதத்தையும், இன மத பேதங்களையும் ஊக்குவிக்கின்ற யுகத்தை இல்லாமல் செய்வோம்" எனவும் எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது உறுதியளித்தார்.
"அனைத்து இன மக்களும் இந்த மோசமான அரசாங்கத்தினால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்து, சுபீட்சமான வாழ்க்கையை உருவாக்குகின்ற பொறுப்பை ஏற்றுக் கொள்வோம்" என்றும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இங்கு உறுதி பகர்ந்தார்.
இத்தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிஷாட் பதியுதீன், "வேறொருவர் கைகாட்டும் வேட்பாளருக்கு அளிக்கப்படும் வாக்குகள், வீணான வாக்குகளாக ஆகிவிடும்" எனத் தெரிவித்தார்.