• முகப்பு
  • அரசியல்
  • சிங்கள மக்களின் பெரும்பாண்மை பெற்ற அரசாங்கம் எமக்கு தேவையில்லை - அனுர குமார

சிங்கள மக்களின் பெரும்பாண்மை பெற்ற அரசாங்கம் எமக்கு தேவையில்லை - அனுர குமார

வவுனியா

UPDATED: Sep 5, 2024, 1:40:55 PM

எங்களுக்கு தெற்கு சிங்களமக்களின் பெரும்பாண்மை பெற்ற அரசாங்கமோ, அல்லது வடக்குமக்களின் பங்களிப்பு இல்லாத அரசாங்கமோ தேவையில்லை.

வடக்கு கிழக்கு தெற்கு மக்களின் நம்பிக்கையினை வென்ற ஒரு அரசாங்கமே தேவை என தேசியமக்கள் சக்தியின் ஜனாதிபதிவேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

தேசியமக்கள் சக்தியின் தேர்தல்பிரச்சாரக்கூட்டம் வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள கலைமகள் மைதானத்தில் இன்று இடம்பெற்றது.

original/img-20240902-wa0045
அதில் கலந்துகொண்டு உரைநிகழ்த்திய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்..

சம்பிக்கரணவக்க, றிசாட்பதியூதீன் ஆகியோர் சயித்துடன் இருக்கின்றனர் சயித் பிரேமதாச வவுனியாவிற்கும் மன்னாருக்கும் வருகைதரும் போது சம்பிக்கரணவக்கவை கூட்டிவரமாட்டார்.

ஆனால் காலிக்கு செல்லும் போது சம்பிக்கவை அழைத்துச்செல்வார். ஆனால் அங்கு றிசாட்பதியூதீனை கூட்டிப்போகமாட்டார். என்ன அரசியல் இது. இது தான்இரட்டை அரசியல். 

original/img-20240901-wa0081
கொள்கை இருப்பது தேசியமக்கள் சக்தியிடம் மாத்திரமே. நாங்கள் அனைத்து இன மக்களின் உரிமைகளை உறுதிசெய்யும் புதிய ஒரு அரசியலமைப்பை உருவாக்குவோம். பிரதேசசபைகளில் இருந்து அதிகாரப்பகிர்வை வழங்கும்படியான ஒரு அரசியலமைப்பு உருவாக்கப்படும்.  

இனவாதத்தினை மூலதனமாக்கி ஆட்சியினை பெற்ற மொட்டுக்கட்சி இன்று சுக்குநூறாகிப்போயுள்ளது. இனவாதம் சாதிவாதத்திற்கு தேசியமக்கள் சக்தியில் இடமில்லை. இப்போதே இந்த நாட்டை கட்டி எழுப்ப ஆரம்பிக்கவேண்டும்.

விவசாயத்தை பாதுகாக்கவேண்டும். உங்கள் ஆபரணங்கள் எங்கே.அவை வங்கிகளில் இருக்கிறது. எனவே இந்த விவசாய கடன்களை தள்ளுபடிசெய்யவேண்டும் விதை ஆராட்சிநிலையங்களை புதுப்பிக்கவேண்டும். 

போதைப்பொருள் பின்புலத்தில் இருப்பது அரசியல்வாதிகளே, அது உங்கள் குழந்தைகளை பாதிக்கும். கிராமத்தை பாதிக்கும் அதனை முழுமையாக நாம் தடுத்து நிறுத்துவோம். 

எங்களுக்கு எவ்வாறான ஒரு அரசாங்கம் தேவை. தெற்கின் சிங்களமக்களின் பெரும்பாண்மை பெற்ற அரசாங்கமா அல்லது வடக்குமக்களின் பங்களிப்பு இல்லாத அரசாங்கமா. அப்படியான அரசு எமக்கு தேவையில்லை. வடக்கு கிழக்கு தெற்கு மக்களின் நம்பிக்கையினை வென்ற ஒரு அரசாங்கமே எங்களுக்குத் தேவை.

இதற்குமுந்தைய ஜனாதிபதிகள் உருவானது தெற்கில் இருந்து மட்டுமே. இம்முறை வடக்கு கிழக்கு தெற்கு மக்கள் இணைந்து தேசியமக்கள் சக்தியை வெற்றிபெறச்செய்யவேண்டும். 

ரணில் கடைசிநேரத்தில் என்ன செய்வாரோ என்று கூறுகின்றனர். ஒன்றுமில்லை. அவர் தோல்வியடைவார் சத்தமில்லாமல் வீடுசெல்வார். அது அவருக்கு பழக்கப்பட்ட ஒன்று. 

இந்தக்கள்வர்களை நாட்டையும் பொருளாதாரத்தையும் சீர்குலைத்தவர்களை, போதைப்பொருள் வியாபாரிகளை உலகத்திடம்எங்களைஅவமானப்படுத்தியவர்களை,போரை உருவாக்கியவர்களை, மூவினமக்களிடையில் சண்டைகளை உருவாக்கியவர்கள் என அனைவரையும் ஒன்றாக தோற்கடித்து நாட்டை பசுமையாக்கி மக்களின் வாழ்க்கையினை அழகாக்கும் ஒரு புதிய அரசை கொண்டுவருவதற்காக நாம் பாடுபடுவோம் என்றார்.

 

VIDEOS

Recommended