• முகப்பு
  • அரசியல்
  • வன்னி மாவட்ட ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வேட்பாளருமான வீ.அருள் நாதன் ஒட்டுச் சுட்டான் சிவநகர் மக்களை சந்தித்துள்ளார்

வன்னி மாவட்ட ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வேட்பாளருமான வீ.அருள் நாதன் ஒட்டுச் சுட்டான் சிவநகர் மக்களை சந்தித்துள்ளார்

வவுனியா

UPDATED: Oct 12, 2024, 2:25:24 PM

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வீணை சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் வடமாகாண கூட்டுறுவு சங்கங்களின் உப தலைவரும் வேட்பாளருமான வீ.அருள் நாதனுக்கும்  கடற்றொழிலாளர் சமாச உறுப்பினர்களுக்கான சந்திப்பொன்று இனறைய தினம் இடம் பெற்றது.

முல்லைத்தீவு ஒட்டுச் சுட்டான் சிவநகர் பிரதேச மக்களுடன் இடம் பெற்ற கலந்துரையாடலின் போது கடந்த 2018 முதல் சட்டவிரோத கடற்றொழில்களுக்கு எதிராக தான் குரல் கொடுத்துவருவதாகவும்,அது போன்று பல்வேறு அடக்கு முறைகள் காணப்பட்ட போதும்,இதற்கு எதிராக பல ஆர்;ப்பாட்டங்களை செய்துவருகின்றமை தொடர்பில் இம்மக்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.

அதே வேளை எமது மக்களின் காணிகள் பல தரப்பினர்களினாலும் கையகப்படுத்தப்பட்டுள்ளது தொடர்பில் ஆளும் தரப்புடன் பேச்சுக்களை நடத்தி அவற்றை விடுவிப்பதற்கு தேவையான  நடவடிக்கையினை எதிர்காலத்தில் எடுக்கவுள்ளதாகவும் மக்களிடத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மக்கள் மிகவும் தெளிவான நிலையில் இருப்பதுடன்வன்னிக்கு சரியான ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தேவையென்பதை இந்த மக்கள் அறிந்துள்ளதாகவும்,தான் முல்லைத்தீவு கள்ளப்பாட்டினை கொண்டவன் என்பதால் மீனவ சமூகத்தின் பிரச்சினைகளை தீர்ப்பதே தலையாய கடமை என்பதை அவர்களிடம் வலியுறுத்தியதாகவும் வேட்பாளர் வீ.அருள் நாதன் இதன் போது குறிப்பிட்டார்.

தென்னிலங்கையில் மாற்றத்தை கொண்டுவந்தது போன்று முல்லைத்தீவு மக்களின் அவ்வாறானதொரு மாற்றம் தொடர்பில் கருத்துக்களை உள்வாங்க வேண்டும் என்பதையும் அவர்களிடம் வலியுறுத்தியுள்ளேன்.

மக்களது வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு நான் தெரிவானால் முல்லைத்தீவு மாவட்ட மக்களின் காணி,கடல் வளத்தினை பாதுகாப்பதுடன்,நகரம்,கிராமம் என்ற பேதமின்றி அபிவிருத்தியின் பால் தேவையான நடவடிக்கையினை முன்னெடுப்பதாகவும் அவர்களிடத்தில் உறுதியளித்துள்ளார்.

அதே வேளை வீடற்ற மற்றும் காணிகளற்ற மக்களின் நீண்டகால பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக் கொடுக்கவும் நடவடிக்கை எடுப்பதாகவும் அம்மக்களிடத்தில் தெரிவித்துள்ளார் வேட்பாளர்.வீ.அருள்நாதன் என்பது குறிப்பிடத்தக்கது.

 

VIDEOS

Recommended