• முகப்பு
  • அரசியல்
  • ஐக்கிய தொழிலாளர் முன்னணி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு

ஐக்கிய தொழிலாளர் முன்னணி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு

ராமு தனராஜா

UPDATED: Aug 4, 2024, 12:11:26 PM

ஐக்கிய தொழிலாளர் முன்னணி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கே தனது ஆதரவினை தெரிவிப்பதாக அதன் தலைவரும் கல்வி ராஜாங்க அமைச்சருமான அருணாசலம் அரவிந்தகுமார் தெரிவித்தார்.

இன்று பதுளையில் இடம்பெற்ற ஊடகவியலாளர்  சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில் 

ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் திகதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் கற்பனையின் ஊடாக ஜனாதிபதி அவர்கள் தேர்தலை தள்ளி போடுவதற்கு முயற்சிகள் மேற்கொள்கின்றார். அல்லது அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்கின்றது என்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர்கள் தொடர்ந்தும் கூறி வந்தனர். ஆனால் தற்போது அந்த அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்யாகி போயுள்ளன. 

காரணம் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது நடந்து முடிந்தாயிற்று.எனவே எமது ஆதரவு யாருக்கு என்று பார்ப்போமேயானால், நான் ஏற்கனவே கூறி இருக்கின்றேன் எனது ஆதரவு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு என்று அதேபோல நான் ஐக்கிய தொழிலாளர் முன்னணியின் தலைவர் என்ற ரீதியிலும் எமது அமைப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கே ஆதரவு என  ஏகமனதாக முடிவு செய்துள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

 

VIDEOS

Recommended