புதிய சிந்தணைகளுடன் பாராளுமன்றத்தில் உறுப்பினர்களை உருவாக்க ஒன்றிணைவோம் - மயில் வாகனம் திலகராஜ்
இர்ஷாத் றஹ்மத்துல்லா
UPDATED: Oct 8, 2024, 11:46:51 AM
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் 22 மாவட்டங்களிலும் தமது வேட்பாளர்களை நிறுத்தி பாராளுமன்றத்துக்கு புதிய முகங்களை அனுப்பவுள்ளதாக உதய சூரியன் சின்னத்தில் ஐக்கிய கூட்டணியாக களமிறங்கும் அணியின் அழைப்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்தார்.
கொழுழ்பு கிறீன் பெலசில் இன்று இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு அவர் கூறினார்.
மேலும் இது தொடர்பில் கருத்துரைக்கையில் :-
கடந்த 75 வருட பாராளுமன்ற அரசியலை நோக்குகையில் இந்த நாட்டில் எதனையும் மக்களால் அனுபவிக்க முடியாத நிலையே காணப்பட்டது.இதற்கு காரணம் மக்களின் தெரிவானல் பாராளுமன்றம் செல்லும் நபர்கள் மக்களை மறந்து தமது தனிப்பட்ட நிகழ்ச்சி நிலை முன்னெடுத்துவந்ததன் நிலையினையே காணலாம்.
தெற்கில் உள்ள பெரும்பான்மை அரசியல் கட்சிகள்,வடக்கிற்கு சென்று தமிழ்,முஸ்லிம் மக்களின் வாக்குகளை பெறுகினறனர்.இப்படியான நிலையில் ஏன் வடக்கில் உதயமான உதய சூரியன் தெற்குக்கும்,முழு நாட்டுக்கும் சென்று தமது பிரதி நிதிகளை பெறுவதற்கான தளத்தினை உருவாக்க கூடாது.
இதனை மையமாக கொண்டு மீண்டும் சுதந்திர யுகத்திற்கு உதய சூரியன் சின்னத்தை கொண்டு செல்லும் பயணத்தினை முன்னெடுக்கும் பணிக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த சங்கரி அவர்களின் கட்சியுயடன் புரிந்துணர்வு உடன்படிக்கை செய்து உதய சூரியன் சின்னத்தில் ஐக்கிய கூட்டமைப்பினை உருவாக்கியிருக்கின்றோம்.
துரமான,தகுதியான,கற்ற மற்றும் துறைசார் அனுபமுள்ளவர்கள் எமது அணியில் போட்டியிட உள்ளனர்.இது போன்று இன்னும் இரு தினங்களுக்கு இன்னும் பல தென்பகுதிய பெறும்பான்மை பிரதி நிதிகளும் எம்முடன் இணையவுள்ளனர்.சுயோட்சை அணிகளாக பிரிந்து வாக்குகளை சிதறடிப்பதை விட எமது அணியில் ஒன்று சேர்ந்து பயணிக்க கூடிய வாய்ப்பினை வழங்க நாம் தயாராகவுள்ளோம்.
ஓற்றுமையின் மூலம் இந்த நாட்டு மக்களுக்கு பாராளுமன்ற தேர்தலில் நல்ல செய்தியினை சொல்வதற்கு இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்ள தமிழ் முஸ்லிம் சிங்களம் என்ற மதம் கடந்து சுதந்திர இலங்கையின் புதிய உதய ஒளியினை பார்க்க அழைப்புவிடுப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயில் வாகனம் திலகராஜ் அழைப்புவிடுத்தார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் சமூக நீதிக் கட்சியின் தலைவர் நஜா முஹம்மத்,மலையக பாட்டாளி அரங்கத்தின் செயலாளர் அருளப்பன் இதய ஜோதி ஆகியோரும் கருத்துரைத்தனர்.