• முகப்பு
  • அரசியல்
  • 25 லட்சம் வரை மருத்துவ காப்பீடு வழங்கப்படும் திருவள்ளுவர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சசிகாந்த் செந்தில் தீவிர வாக்கு சேகரிப்பு.

25 லட்சம் வரை மருத்துவ காப்பீடு வழங்கப்படும் திருவள்ளுவர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சசிகாந்த் செந்தில் தீவிர வாக்கு சேகரிப்பு.

சுரேஷ் பாபு

UPDATED: Apr 14, 2024, 8:47:16 AM

நடைபெறவுள்ள உள்ள நாடாளுமன்ற தேர்தலில் திருவள்ளூர் தனி தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளராக சசிகாந்த் செந்தில் போட்டியிடுவது தொடர்ந்து ஆவடி எம்எல்ஏ சா.மு. நாசர் பூந்தமல்லி எம்எல்ஏ ஆ. கிருஷ்ணசாமி ஆகியோருடன் திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் ஊராட்சியில்  வாக்கு சேகரிக்க சென்ற போது

அப்பகுதி ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்வாணன் தலைமையில் நடைபெற்ற உற்சாக வரவேற்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொண்டர்கள் ஒன்றிணைந்த பட்டாசுகள் வெடித்து மலர் தூவி மாலை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கருடைய திருவுரு சிலைக்கு காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சசி காந்தி செந்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து பொது மக்களிடையே பேசி வேட்பாளர் கூறுகையில் 

தேர்தல் வாக்குறுதிகளான 100 நாள் வேலை திட்டத்தை 150 நாளாக உயர்த்தி தருவதாகவும் 250 ரூபாய் என்ற ஊதியத்தை 400 ரூபாயாக உயர்த்தியும் வழங்குவேன் என்றும் 

மேலும் மகளிருக்கு ஆண்டுக்கு ரூபாய் ஒரு லட்சம் உரிமைத் தொகை வழங்கப்படும், இளைஞர்களுக்கு ஓர் ஆண்டு கால ஊக்கத்தொகையுடன் தொழில் பயிற்சி அளிக்கப்படும்.

அனைத்து தரப்பு மக்களும் உயர் சிகிச்சை மற்றும் சிக்கலான அறுவை சிகிச்சை இருந்தாலும் தனியார் மருத்துவமனைகளில் செய்து கொள்ள ஏதுவாக ரூபாய் 25 லட்சம் வரை மருத்துவ காப்பீடு வழங்கப்படும் எனவும் 

வருகிற தேர்தலில் கை சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

VIDEOS

Recommended